Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

431-கனிந்த கனி கையில் விழுவதில்லை முயற்சிப் பவனுக்கே கிட்டும். 432-உண்பார் ஊரார்புறம் பேசி மகிழ்வார் நம் துன்பத்தில் இல்லார். 433-பூக்கின்ற பூவெல்லாம் காயவதில்லை பிறக்கின்ற மனிதர் எல்லாம் வாழ்வது இல்லை.434- வீணான வார்த்தைகளை உதிர்த்து தூவாமல் நம்பிக்கை விதைகளை விதை.435-நமக்குள் இருக்கும் ஆக்கும் சக்தி ஊக்கசக்தி உழைப்பை நம்பி. 436-பிரச்சனை என்ற பிரசவ வலி நிற்பதில்லை நீண்ட நேரம்.

Read More

26-வறுமை போக்கும் வளம் நீயே!         வாழ்த்தும் கரம் நீயே! சிறுமை அகற்றும் திரம் நீயே!      சிவன் மைந்தன் நீயே!ஆறு முகம் ஆனவன் நீயே!       கார்த்திகை தீபம் நீயே! மறுமை நீக்கும் தலைவன் நீயே!       மதிக்கும் சிறுவன் நீயே!

Read More

425-நாடு வளர தொண்டனாய் இரு நல்லதை சொல்வதில் தலைவனாய்.426- தன்னம்பிக்கை வளர சிலந்தியின் முயற்சி எறும்பின் சுறு சுறுப்பு. 427-தாயின் கருவறையும் தாளாத வழியும் தரணியில் யாவருக்கும் சமம். 428-பத்து விரலும் பாதை அமைக்கும் பரந்த உலகில் நிலைக்க. 429-சொல்லிச் சொல்லி சோர்ந்து போகாமல் செயலில் இறங்கிச் செய்.430- சோதனை என்பது சோர்ந்து விடவல்ல சாதனை செய்து உயிர.

Read More

25-கனிந்த ஞானப் பழம் நீயே!       கருணை வடிவம் நீயே! இனிக்கும் கரும்பு சார் நீயே !       இதயத்தில் என்றும் நீயே !பனியில் துளிர்த்த முத்து நீயே !         படிகக் கல்லும் நீயே!இனிய நல் உறவும் நீயே!      இனிக்கும் கல்கண்டும் நீயே!

Read More

413- முள் பாதை கடினம் தான் எடுத்து எறிந்து நட. 414-தொலை நோக்குப் பார்வையை பதித்து விட்டு தொடர் முயற்சியால் வெற்றி. 415-தோல்விகள் தோளை தொடும்முன் உயர்ந்து விடு தோல்விகள் தேய்ந்து போகும்.416- நேரம் அறிந்து செயல் படு நேர்மையால் உயர்ந் திடு.417- எண்ணமெனும் ஏணிப்படியின் மேல் செல்ல ஏற்றமெனும் தளம் கிட்டும்.418- குழந்தை வளர்ந்தால் குடும்பம் மகிழும் குடும்ப வளர்வு நாட்டு உயர்வு.

Read More

23-முத்தமிழ் முருகா மூச்சு நீயே !         முக்கனி சுவை நீயே! வித்தகம் செய்யும் குரு நீயே !           விண் ஒளி நீயே! புத்தகக் கருவின் பொருள் நீயே !            புத்துயிர் தருபவன் நீயே !குத்தன் நீயே சித்தம் நீயே!                சிந்தனை தெளிவும் நீயே!

Read More

407-புற அழகால் புகழப் படுபவர் அக அழகாய் சுருங்கி.408- மனப் பக்குவமே வாழ்க்கை பக்குவம் மகிழ்ச்சி மனதின் எழுச்சி.409- நேர்மை வழியானால் முட்கள் விலகும் இலக்கு வளர வாழ்க்கை சுவைக்கும்.410- ஒருகண் மற்றொரு கண்ணை பார்க்காது குறை பார்க்காது நட்பு. 411-தெளிந்த நீரோடை போன்ற மனதில் தெளிவான சிந்தனை ஊற்று. 412-வாழ்க்கை என்பது ஒருவழிப் பாதை போகும்போதே பார்த்துப் போ.

Read More

401- எண்ண அலைகள் செல்லச் செல்ல எமன் எண்ணமும் கரையும். 402-மனதை காயப்படுத்த வார்த்தைகள் உண்டு எண்ண உறுதியே மருந்து.403- கற்றுக் கொடுப்பது ஒரு பருவம் கற்றுக் கொள்வது முழு வடிவம்.404-பொருளை சேகரித்தல் புதிய உற்சாகம் அன்பை சேகரித்தல் ஆனந்தம். 405-புயலில் சிக்கும் படகு போல் துன்பத்தில் சிக்கும் மனிதர்.406- அன்பு ஆழமான வேராய் இருந்தால் நட்பு அதன் கிளை.

Read More

21-வண்ண மயிலில் வருவாய் முருகா!           வருபவர் கண் பட! திண்ண  மனதில் நிற்பாய் முருகா!           திடம் தந்து காப்பாய்! ஒண்ணார் ஓட போர் செய்வாய்!       உறுதி தந்து காப்பாய்! சண்ணித்து இருப்போம் முருகா உன் !      சரவண பொய்கையில் காப்பாய்!

Read More

395-உண்மை உரமாய் உழைப்பு பயிராக அறுவடை சிகரம் தொடும்.396- ஏற்றம் மாற்றம் வர விரும்பின் தடைகளை தகர்த்து எறி.397- என்னும் எண்ணம் பெரியதாக இருப்பின் ஏற்றம் ஏணியாய் வரும். 398-ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஓயாது உழைக்கும் மனிதர். 399-சுதந்திரம் சுதந்திரம் என நாள்தோறும் கொடி பிடிப்பு குழந்தைக்கு சுதந்திரம் கதவடைப்பு. 400-கூடா நட்பு கேடு தரும் கூடி உழைக்க கோடி பயன்.

Read More