இருட்டில் தொலைத்து விட்டு வெளிச்சத்தில் எதை தேடுகிறாய்?
இருட்டை வெளிச்சமாக்க
ஏன் தயங்குகிறாய்?
புறத்தை அழகு செய்து
புதிது புதிதாய் காட்டுகிறாய் அகத்தில் நிறையும்
அழுக்கை மட்டும்
ஏன் அப்படியே விட்டு விட்டாய்?
இருக்கும் அனைவருக்கும் குறையாமல்
இருக்கிறது பிரச்சனைகள் இறந்த அனைவருக்கும் கூட நிறையாமலே இருக்கிறதே ஆசைகள்.
யாரிடமும் போய் கதை கேட்டாலும்
கதை கதையாய் சொல்கிறார்கள்
அவர் மட்டும் உத்தமராம்
சத்யனாம்
இலட்சியம் வெல்லும் போராளியாம்.
எல்லோர் கதையும் இதுதான் என்றாலும் ஏன் சமுதாயத்தில் இத்தனை சரிவுகள்
கதைகள் எல்லாம் கதைகள் தானோ?
எல்லோர் கதையிலும் கதாநாயகன் இருப்பதால் வில்லன்கள் உருவாக்கப் படுகிறார்கள் காரணமே இல்லாமல் கூட சில சமயம்
நிறைந்து போய்விட்ட சாக்கடையில் நீ மட்டும் நனையாமல் முத்தெடுக்கும் உன் இலட்சியத்தை எப்படி மெச்சுவது?
உன் ஆசை மாற்றத்திற்கு சமுதாயத்தையே இழக்கிறாயே
நீயும் நேர்மையும் பாதியில் வருவதல்ல உன் பாதைகள் மாறும்போது உனக்காக
அது வளைந்தும் நெளிந்தும் போவதல்ல
ஒழுங்காய் குற்றம் ஒற்றுக் கொள்
சரியாய் வாழக் பச்ச கற்றுக் கொள் இன்றில் இருந்து திருத்திக் கொள்
இனியாவது பிழைத்துக் கொள்
இல்லா விட்டால் நீயும் தூசு படிந்த
குப்பையாய் கிடப்பாய் சிலர் ஏறி
மிதித்து நடந்து செல்லும் போது
ஏன் என்று கேட்கும் உரிமைகூட உனக்கு இருக்காது.