இத்தனை நாள் இப்படி பழகிவிட்ட பிறகு
நட்பென்று சொல்ல
நாவரவில்லை.

நாள் தோறும் கூடவே
இருந்த போதும் காதல் என்று சொல்ல நாங்கள் காதலிக்கவில்லை.

இணைந்து இருக்கிறோம் பிரிந்தால் அழுகிறோம் சண்டை இடுவோம்
சமாதானம் ஆவோம்.

இப்படித்தான் பொது இடத்தில் இருக்க வேண்டும் என்றில்லை எப்படியும் இருப்போம்.

அடுத்தவர்களைப் பற்றி அணுவும் சிந்தித்ததில்லை இப்படி பெயர் சொல்ல
முடியாத உறவில் நின்று
பெரும் நாட்களை கழித்து
விட்ட பிறகு….

நாளும் மாறியது
தவிர்க்க முடியாத
பிரிவுக்கு நாங்களும் விதிவிலக்கல்ல!
வாழ்க்கை மாறியது,
நாட்கள் ஓடியது.

அந்த உறவு அவளின் பிரிவு வருத்தத்தையோ! இன்பத்தையோ! தரவில்லை.

நெருடல்களாக
நெஞ்சில் உறுத்தியது
நாங்கள் சுற்றிய
அதே இடங்களில்
இன்று வேறு யாரோ?

மாணவர்களே! இன்று கண்ணை மறைக்கும்
இன்பம் நாளை
நெஞ்சு அடைக்கும் நெருடல்களாக…
உருத்தும்.

ஊனமாக வாழ்வது கூட சுகம் உருத்தலோடு வாழ்வது ரணம் உடலோடு மனதார ஒருத்தியோடு வாழ்வதே சுகம்.

மதி மயக்கிப் போகாதே மனம் கசந்து வாழாதே
தெரியாமல் செய்தால்
மாற்றிக் கொள்
தெரிந்தே செய்தால்
திருத்திக் கொள்.

Share.

Leave A Reply