ஏதோ ஒரு கூட்டத்திற்கு போக ஒரு பேருந்தில் ஏறினேன் பேருந்து புறப்படல ஏதோ
அரசு ஊழியர்கள்
சம்பள உயர்வு
போராட்ட கூட்டமாம்.

நல்ல வேளை ஒரு தனியார் வண்டி வந்தது அதில் இருந்த கூட்டத்தையும் மீறி வண்டி உலுங்கி உலுங்கி அதுல எங்களையும் ஏத்திட்டாங்கோ நல்ல மனசுக்காரங்க,..

வழக்கமான பாதையிலே போகாம மாறி மாறிப் போச்சு ஏதோ பக்தர் கூட்டம்
கோயில் திருவிழாவாம்.

போன பாதையிலாவது ஒழுங்கா போச்சா?
பாதியிலேயே நிறுத்திட்டாங்க.

ஏதோ வயித்து பிரச்சனை
பசி தாங்காம மறியல் செஞ்சது ஒரு கூட்டம்….

டிராபிக் ஓவரா இருந்ததாலே வண்டியில இருந்தவங்க எல்லாம் ஒதுங்கி நின்னு கூட்டத்தைப் பார்க்க…

கூட்டம் கூட்டமா லாரியிலே எல்லோரும் போய்க்கிட்டு இருந்தாங்க கண்டிப்பா அரசியல் கூட்டமாகத் தான் இருக்கும்….

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி ஏறினா டவுன் வரைக்கும் போயிடலாம் இலவசமா சோறு போட்டாங்க அதுக்கு அடிச்சுகிட்ட கூட்டத்திற்கு பட்டினியாவே கிடந்திடலாம்.

அப்படியே டவுன் சுற்றிப் பார்க்க போன கூட்டத்திலே
சாமியாரை பார்க்க ஒரு கூட்டம் சாமான் வாங்க ஒரு கூட்டம் பள்ளிக் கூடத்தில் சேர
ஒரு கூட்டம்

படிக்க ஒரு கூட்டம்
வேலை தேடி ஒரு கூட்டம் வேலை கிடைச்சும் சம்பளம் கிடைக்காமல் ஒரு கூட்டம்

காசு சம்பாதிக்க ஒரு கூட்டம்
காசு தொலைச்சிட்டு அழுகிற ஒரு கூட்டம்
கல்யாண மண்டபத்திற்கு
ஒரு கூட்டம்
காதலிக்க தனி கூட்டம்

பசனை பாடிக்கிட்டு ஒரு கூட்டம் சாமியே இல்லைன்னு
ஒரு கூட்டம்
உபதேசம் செய்ய ஒரு கூட்டம் அழிஞ்சு போக பல கூட்டம்.

சாப்பிடப் போனா கூட்டம்
துணிக் கடைக்குப்
போனா கூட்டம்
ரயிலுக்குப் போனா கூட்டம் சினிமாவுக்குப் போனா கூட்டம்

மருத்துவமனையில் கூட்டம் பூங்காவிலும் கூட்டம்
பாரின் போனா கூட்டம்
எங்கு போனாலும் கூட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்
அய்யோ நான் எந்த கூட்டத்திற்கு புறப்பட்டேன் எனக்கு மறந்து போச்சு உனக்காவது தெரியுமா?

நீ எந்த கூட்டம்னு….

Share.

Leave A Reply