காலை பிறந்து விட்டது
வேளை மலர்ந்து விட்டது நாளை என்று எதையும்
ஒத்தி போடாமல் இன்றே விரைந்து முடி .

எதையும் எதிர்பாத்திடாது யாரையும் எதிர் நோக்கிடாது உன் கடமை எது என்பதை உணர்ந்து பின் சரியாய் செய்து முடி.

சரியாக் கற்று முடித்து முறையாகப் பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு உன் இலக்கை உறுதியாகத்
தொட்டு விடு.

வெற்றியை மட்டும் எண்ணிடாது
தோல்வியை என்றும் எண்ணிடாது
கடமையில் மட்டும் கவனமாக இருந்து வெற்றிக் கொடிகட்டி சிகரம் எட்டி முத்தமிடு.

Share.

Leave A Reply