பாரத தேசம் பக்திக்கு இருப்பிடம்.இந்து கடவுளின் அவதாரம் ,இந்து கோவில்கள் அதிகமாக இருக்கும் இடம் இந்தியா என்ற பெருமை மிக்க நாடு நம் நாடு. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதை நேசம் என்கிறோம். அந்த நேசத்தை இறைவன் மேல் செலுத்துவது பக்தி ஆகும் .
இறைவனை முழுமையாக நம்பி அவனிடம் நம்மை ஒப்படைக்கும் போது இப்பிறவியில் எல்லா பேரும்கிடைத்து, பிறவி பயன் அடைந்து விடுகிறது.அதாவது நமது ஆன்மா ‘முக்தி’அடைந்து விடுகிறது.
மனித சமுதாயத்தில் தர்மம் சீர் குலையும் போதெல்லாம் நிலைமையை சரி செய்வதற்காக பகவான் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.அதர்மம் ஆதிக்கம் செலுத்தும் போதெல்லாம் பக்தர்களைக் காத்து கொடியவர்களை ஒழித்து தர்மத்தை நிலை நாட்ட யுகம் தோறும் பகவான் கிருஷ்ணர் அவதரிக்கிறார்.
முழுமுதற் கடவுளாகிய பகவான் கிருஷ்ணர் எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக விளங்குகிறார்.உண்மையான பக்தனுக்கு உதவுபவர் .அவர் தாமரை பாதங்களை பற்றி அவர் புகழ் பாடும் பக்தனுக்கு பக்க பலமாக இருப்பவர்.பக்தியுடன் நேசிக்கும் பக்தன் பக்கத்தில் இருந்து தாங்குபவர்.
உதாரணமாக பாரதப்போர் நடந்தபோது பாண்டவர் பக்கம் இருந்து தர்மத்தை நிலைநாட்டி மகாபாரதம் எனும் மகத்தான காப்பியத்தில் கிருஷ்ணர் முக்கிய காரனதாரியாக இருந்து தர்மத்தை நிலைநாட்டி மகாபாரத குருஷேத்திரப்போரை நிறைவு செய்தார்.
கிருஷ்ணர் மேல் பக்தி செலுத்தும் பொது ,அச்சம்,பேராசை,பொல்லாங்கு,மாயை ஆகியநெருப்பு அணைந்து போகும்.இறை பக்தி ஒன்றே மனதில் நிறைவு தருவதால் ஒழுக்க நெறியில் இருந்து தவறாது ,பக்தி மார்க்கத்தில் பலம் கூடி வைகுண்ட பிராப்தம் கிட்டும்.
பக்தி எந்த வயதில் வரவேண்டும்? முதுமையில் என்று பலரும் எண்ணுகிறார்கள் .பக்தி கருவிலே வரவேண்டும் .காலம்……..காலமாக வந்து முதிர்ந்த நிலைதான் பரமன் பாத மலரடி சேர்வது ,இதில் சுயநலம் இருக்காது.
ஆனந்தம் மட்டுமே பக்தி தருவது.பெற்றதாய் ,வளர்ப்புத்தாயிடம் இடம் மிகுந்த அன்பு கொண்ட கிருஷ்ணன்,தன்னை கொல்ல வந்த பூதனாஎன்ற அரக்கியையும் தாயாக எண்ணி முக்தி கொடுத்த பரம்பொருள் கிருஷ்ணர்.பூதனாவின் உடல் எரிந்த பொது அதிலிருந்து நறுமணம் வெளிப்பட்டது .அந்த நறுமணம் அவள் கிருஷ்ணரால் கொல்லப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது .
அரக்கி பூதனாவின் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டு அவள் தெய்வீகமான உடலைப் பெற்றாள் என்றால்…பக்தி செலுத்தும் பக்தர்க்கு பாதுகாப்பும்,பக்க பலமும் கிருஷ்ணர் .எனவே நாம் பத்தி மார்க்கம் சென்று இறைவன் தாழ்பணிவோம்.