தான் பிறந்த ஊர் பெயரை சேர்த்து சிறுமுகை செல்வராசாக கோவையில் வளம் வந்து கவிதைகளை தந்த ஆசிரியர் "இரவுப் பந்தலுக்குள் …"என்ற நூலினை 3 0 தலைப்புகளில் பதிவாக தந்து இருக்கிறார்கள்.தான் செய்யும் தொழில் மேல் உள்ள பக்தி ,பாசம் சமர்ப்பணம் செய்ததில் தெரிகிறது. த.மு.எ.க.ச.மாநில செயலாளர் ச. தமிழ்ச் செல்வன் வாழ்த்துக்கள் பெற்று வெளியிட்ட நூல் ஆசிரியர் சிறந்த பாடகரும் கூட.எழுதிய பாடலுக்கு மெட்டுப்போட்டு இசைப்பதில் வல்லவர். சில பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.



இனி கவிதையை வாசிப்போம்.
‘அகரமாய் உனையாக்கி 
அகிலமே இணையாக்கி 
அகழாய் நீ அருள் பாலித்தாயே’
என்பதில் தாயை மதிக்கும் பண்பு தெரிகிறது.

‘மூடிக்குள் இருந்தால்
முடங்கிக் கிடக்கும் 
மூடியைத் திறந்தால்
முடியையும் இறக்கும்’
புரட்சி தெரிகிறது.

‘எதுகையும் மோனையும் மரபுக்குக் கரும்பு 
எத்தனை விதங்களில் செய்திடும் குறும்பு 
புதுக்கவி தைகளோ கடித்திடும் எறும்பு 
வார்த்தை மரபுக்குள் புகுந்து வருவது விருந்து 
வானில் வடமின்றி வரும் வெள்ளித் தேரோட்டம் 
கோலம் புள்ளிகளாய் நட்சத்திரப் பூந்தோட்டம் 
காணும் சுவை கூட்டும் நமது கலைக்கண்ணோட்டம் ‘
என்ற வரிகளில் இயற்கையை காணும் கண்ணோட்டம் தெரிகிறது.

‘போட்டியிட்டு ஆண்களோடு படிக்க வரும் பெண்கள்
பட்டம் பெற்று உயர்பதவி வகிக்க வரும் பெண்கள் 
சட்டம் கற்று சூசகமாய் ஆளவரும் பெண்கள்
திட்டம் தீட்டி தேசநலம் காக்க வரும் பெண்கள் ‘
என பெண்களை போற்றுகிறார்.நாமும் ஆசிரியரை வாழ்த்துவோம். கவிதை பணி தொடர மேலும் வளர வாழ்த்துக்கள்.
பக்கம் : 8 2
விலை : ரூ 5 0 -0 0 
வெளியீடு:  
விவேக் பதிப்பகம்,
நெ. 1 . நேரு நகர்,
சாமிசெட்டிபாளையம் -அஞ்சல் 
கோவை  – 641 047 , 
cell — 99947 69920
email- sirumugaiselvasrasu@gmail.com.
Share.

Leave A Reply