தமிழ் மருந்து கடைகளில் பிள்ளை மருந்து என்று கேட்டால் எல்லா மருந்துகளும் கலந்து  கொடுப்பார்கள்.அவற்றை இடிகல்லில்  இடித்து அல்லது அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அல்லது தட்டையாக தட்டி வெயிலில் காயவைத்து,நன்கு காய்ந்தபின் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவேண்டும்.

குழந்தை பிறந்த வீட்டில் பச்சை மருந்தாக 5 அல்லது 7 நாட்கள் காலை,மாலை இரண்டு நேரமும் சிறிது சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புண் ஆறிசாப்பிடுவது சீரணமாகி உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.குழந்தை காதில் ஊதி விட குழந்தைக்கும் பால் குடிப்பது சீரணமாகி வாந்தி எடுக்காமல் நல்ல முறையில் இருக்கும்.

குழந்தைக்கு மூன்று மாதம் ஆனபின்பு குழந்தையை  குளிக்க வைக்கும்போது மருந்து உருண்டையில் ஒன்றை எடுத்து வெது வெதுப்பான நீரில் தொட்டு சங்கடையில் ஒன்று அல்லது இரண்டு உரசு,உரசி கொடுத்தால்,சளி,காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்காது.வயிற்றுப் பொருமல் ,வாயு பிடிப்பு ,சீரணம் ஆகாத நிலைக்கு தகுந்தபடி பாதி, ஒன்று, இரண்டு என்று  சாப்பிட நோயில் இருந்து விடுபடலாம்.

இடைமுள் 

இடை முள் என்பது அம்மை நோய் மிகுந்து மறுமுள் பாய்வதாகும்.அம்மை போட்டு இருக்கும் பொது சரியாக இறங்காமல் குளிக்க வைக்கும் பொது அல்லது மஞ்சள் ,வேப்பிலை அரைத்து தடவாமல் விடும்போது மருமுள் ஏற்படும்.

இதைபோக்க மஞ்சள்,வேப்பிலை தான் மருந்து இரண்டையும் நன்கு அரைத்து உடலில் பூசினால் மருமுள் உதிர்ந்துவிடும்.

இதழ்

இதழ் என்பது பூவிதழ் ,உதடு,கண்,இமை,சாதி பத்திரியாகும்.பூவிதழ் ரோசா பூவைகாயவைத்து தாளிக்க, அரைத்து முகத்தில் பூசி முக அழகை கூட்ட பயன்படுகிறது .பனி,குளிர் காலங்களில் உதடு வெடிப்பு வந்து வலி ஏற்படும் .அப்போது தேங்காய் எண்ணெய் ,வெண்ணை தடவி வலி வராமல் பாதுகாத்து கொள்ளவேண்டும்.

இட்லி

இட்லி தமிழர்களின் காலை உணவு.இட்லி ஆவியில் வேகவைப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவது இல்லை.எளிதில் சீரணமாகும்.சிறு குழந்தை முதல் வயதானவர் வரை சாப்பிட ஏற்ற உணவு.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்கள் கூட  இட்லியில் தயிர் தொட்டு சாப்பிடும்போது வயிற்றுப்போக்கை  கட்டுப் படுத்தும்.

இராகி

இராகி (கேழ்வரகு)ஊட்டச்சத்து நிறைந்த உணவு.சிறிய குழந்தைகளுக்கு இராகி மாவில் களி செய்து கொடுத்து வந்தால்பசிக்கு எளிய உணவு சீரணம் எளிதில் ஆகும். வளர்ச்சியுடன் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.இராகியில் புட்டு, ரொட்டி,களி போன்றவை செய்து சாப்பிடலாம்.பெண்களுக்கு தாய் பால் பெருகும்.

இலந்தப்பழம்

இலந்தப்பழம் புளிப்பு சுவை உடையது.சீசனில் பலமாக வாங்கி சாப்பிடலாம் சீசன் இல்லாத சமயத்தில் சாப்பிடுவதற்காக கொட்டை நீக்கி பழத்தை தட்டி வெயிலில் காயவைத்து சாப்பிடலாம்.(கடைகளிலும்கிடைக்கிறது )மசக்கை நிலையில் உள்ள பெண்கள் சாப்பிடும் போதுவாந்தி வருவதை கட்டுப்படுத்தும்.

இலைக்கறி

இலைக்கறி உடலுக்கு மிகவும் உகந்தது.உணவில் ஏதாவது ஒரு வகை கீரை சேர்த்துக்கொண்டால் நோய் பக்கத்தில் வர பயப்படும்.கீரையில் நெய்யிட்டு சாதத்துடன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்டும்போது தேவையான சத்து கிடைப்பதுடன் எளிதில் சீரணமாக உதவுகிறது.

இரசம்  

உணவு சாப்பிடும் பொது சாதத்தில் சிறிது இரசம் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி சேர்த்துக்  கொள்ளும் பொது மிளகு,சீரகம்,பூண்டு,கறிவேப்பிலை ,கொத்தமல்லி இப்படி சத்துக்கள் உடலில் போய் எளிதாக சீரணம் ஆகும்.வாயு தொல்லையில் இருந்து காக்கும்.

இஞ்சி

இஞ்சி மருத்துவ குணம் உடையது.வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு செரிமானம் ஆகாமல் துன்பப்படுபவர்கள் இஞ்சியை சாறு எடுத்து குடித்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.குழந்தைகள் உள்ள வீட்டில் இஞ்சியும்,சர்க்கரையும் சேர்த்து இஞ்சி மரப்பான் செய்து வைத்துக்கொண்டு,குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சீரணம் ஆகும்.வாந்தி போன்றவை வராமல் தடுக்கும்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை  தடுக்க தினமும் உணவில் 5 கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொண்டால் இதய நோயாளிகளிக்கு மாரடைப்பு வருவது தடுக்கப்படும்.

இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் கழுவி சுத்தமாக்கி,சிறு சிறு துகள்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.வட சட்டியில் ,தேவைக்கு நல்லெண்ணை  விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் இஞ்சித் துருவலையும் போட்டு நன்கு வதக்க வேண்டும் நன்கு வதக்கி வந்ததும் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்,ஒரு தேக்கரண்டி மல்லித்தூள்,சிறிது மஞ்சள் தூள் ,தேவைக்கு உப்பு சேர்த்து அதனுடன் நன்கு வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும் .

சுண்டக்காய் அளவு புளி எடுத்து கரைத்துக் அதை இஞ்சி கலவையில் ஊற்றி நன்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.சுருளைச் சுருளக் கிளறி தொக்குபோல் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து அதை தயிர் சாதத்துக்கு சிறிது சாப்பிட்டு வர அசீரணக்கோளாறுகள் நம்மை அண்டவே செய்யாது.

பித்த வாந்தி

பித்த வாந்தி, தலை சுற்றல் உள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் படுத்துக்கொள்வார்கள்.அப்படிப்பட்டவர்கள் இஞ்சி,மல்லி,சர்க்கரை,காப்பித்தூள் போட்டு ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் கொதிக்க பித்த வாந்தி தலை சுற்றல் உள்ளவர்கள் என்னவைத்து அரை டம்ளர் அளவு வந்தவுடன் இறக்கி வடிகட்டி குடித்து வர தலை சுற்றல் ற்கும்.இதாக்கும் நிற்கவில்லை நிஎன்றால் ………கைப்பிடி அளவு இஞ்சியை எடுத்து தோல் சீவிஅரைத்து சாறு எடுத்து சிறிது நேரம் வைத்து விட வேண்டும்.வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்று அடியில் தங்கி விடும் .சாறை மட்டும் வடிகட்டி வேறு டம்ளரில் எடுத்துக்கொள்ளவேண்டும்.அதில் பாதி அளவு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதனுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.இவ்விதம் வாரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் பித்தம்,வாயு,அசீரணம்,மப்புகாய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை கவனிக்கவேண்டும்.

இஞ்சி காரமானது குழந்தைக்கு கொடுக்கக் கூடாது என்பதால் தாய் குடித்து குழந்தைக்கு நிவாரணம் கிடைக்கும்.இங்க்சிக்கு கொழுப்புச்சத்தை குறைக்கும் குணமுண்டு .எனவே உணவில் இஞ்சியை எதில் பயன் படுத்த முடியுமோ அதில் எல்லாம் இஞ்சியை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

Share.

Leave A Reply