மருத்துவத் தொடர்-59
- பாகற்காய்
பாகற்காய் பார்க்க அழகாக இருக்கும் சுவைத்தால் கசப்பாக இருக்கும் .
பாகற்காய் கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த காய் .
வயிற்றில் ஏற்படும் பூச்சிகளை அழிக்கக்கூடிய குணம் உடையது. பாகற்காய் கொடியில் உள்ள இலைகளை பறித்து சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப் பூச்சி வெளிவந்து விடும். வயிற்றுவலி குணமாகும் .
பாகை இலை கிடைக்காதவர்கள் பாகற்காய் கொட்டையை அரைத்து பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சி வெளிவந்து விடும்.
பாகற்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரழிவு நோய், வயிற்றுவலி, வயிற்றுப்பூச்சி இவைகள் வராமல் தடுக்கலாம் .
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் கட்டுக்குள் இருக்கும்.
பாகற்காய் குழம்பு, மண்டி , வறுவல், தொக்கு செய்து சாப்பிடலாம் .’
பாகற்காயை வறுத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். கசப்பு அதிகம் இருக்காது. பெரியவர்கள் அதிகம் மண்டி, பச்சடி, குழம்பு செய்து சாப்பிடுவது நல்லது .
பச்சை பச்சை பாவக்காய்
பார்த்துப் பார்த்து வாங்கனும்
மிளகாய் புளி சேர்த்து
பச்சடி நாம் செய்யலாம்
வட்ட வட்டமாய் நறுக்கி
உப்பு மிளகாய் சேர்த்து
வறுத்துப் பொறித்து சாப்பிட
சுவை மிகுந்த பாகற்காய்
பொடிப் பொடியாய் நறுக்கி
தயிர் உப்பு போட்டு
வெயிலில் உலர வைத்து
வேண்டும் போது செய்யலாம்
பூச்சி புழுவை அழித்திடும்
வயிற்றுப் புண்ணை ஓட்டிடும்
சோகை வராமல் காத்திடும்
சர்க்கரை நோயைப் போக்கிடும்..
62.சப்போட்டா
சப்போட்டா பழம் நமது உடம் ஆரோக்கியத்திற்கு சப்போட்டாக இருக்கும். தோல், சதைப்பகுதி, கொட்டை எல்லாமே மருத்துவக்குணம் கொண்டது .
எனாவே, பழத்தை கழுவி தோலுடன் சாப்பிடுவது நல்லது. தோல் நீக்கி , பால், சர்க்கரை , சாக்லேட்டு போட்டு மின் அரைப்பானில் அரைத்து குடிக்க சுவை மிகுந்த பானம், குழந்தைகள் விரும்பிக் குடிப்பார்கள் .
தமிழ் நாட்டில் அதிகமாக கிடைக்கும் பழம்.பித்தம், காய்ச்சல் குணமாக்கும், குணம் உண்டு ,விதைகள் சிறுநீர் நன்கு போகச் செய்யும்.