திருநீற்றுப்பச்சிலை என்கிற இந்த மூலிகை கரந்தை, தூன்னுத்துப்பச்சிலை, உறுத்திரச்சடை , பச்சை சப்ஜா,  விபூதி பச்சை , பச்சபத்திரி, திருநீற்றுப் பத்திரி,  என்கிற வேறு பெயர்களும் உண்டு பழங்காலங்களில் திருநீர் தயாரிக்க இந்த இலையின் சாம்பல்  பயன்பட்டு வந்ததால் இதற்கு திருநீற்றுப் பச்சிலை என்று பெயர் வந்திருக்கலாம்.                          

இதை வீட்டில் வைத்து வளர்க்கலாம் இது குரு பகவானின் மூலிகை தனது ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள்.  இந்த மூலிகையை தங்களது வீட்டில் வைத்து வளர்த்திட குரு தோஷம் நீங்கும்.  மேலும் வாஸ்து படி இதை வீட்டில் வைத்து வளர்க்கும் போது இதன் வாசனை நுகரும் பொழுது பலவிதமான நோய்கள் குணமடைகின்றன.

நீண்ட பயணம் சென்று வரும் பொழுது ஏற்படும் தலைவலி உடல் உபாதை உடல் சோர்வு மன அழுத்தம் போன்றவைகள் இலிருந்து இந்த இலையின் வாசனையை நுகரும் பொழுது உபாதைகள் குறைந்து நீக்கும் தன்மை கொண்டது.                     

இது நுண்ணுயிரி யான வைரஸை எதிர்க்கும் தன்மை  கொண்டது.  இதன் இலைகள் கொசு விரட்டியாக பயன்படுகின்றன.  துளசி தரும் நன்மைகள் அனைத்தையும் இந்த மூலிகையும் தருகிறது.  இந்த விதைகள் சப்ஜி விதை என்ற பெயரில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது நீரில் ஊற வைத்தால் நீரை உறிஞ்சிக் கொண்டு வழவழப்பாக மாறிவிடும் நீர்க்கடுப்பு உடல் சூடு போன்றவைகளை தீர்க்கும்.                         

திருநீற்றுப் பச்சிலை உடன் வசம்பு சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர எப்படிப்பட்ட முகப்பரு வாக இருந்தாலும் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும். படை, சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள். இந்த இலையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்துவர படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு மேலும் சரும பிரச்சனைகள் தீர்ந்து உடல் பளபளப்புடன் காணப்படும்.                             

காது வலி காது சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த இலைகளின் சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட காது பிரச்சினைகள் தீர்ந்து  நல்ல மருந்தாக இது பயன்படுகிறது.  தேள் கடித்தால் கடிவாயில் இந்த சாற்றை பிழிந்து அந்த இடத்தில்  அங்கு வைத்து கட்டும்பொழுது தேள்கடி விஷம் இறங்கும் மேலும் தேள்கடி கடுகடுப்பும் குறைந்து குணமடைய நல்ல மருந்தாக பயன்படுகிறது.                       

கண்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் கண் கட்டியின் மீது இந்த இலையின் சாற்றை தேய்த்து வர கண் கட்டி தீரும்.     கால் ஆணி உள்ளவர்கள் இந்த இலையை அரைத்து கால்களில் கட்டி வர ஏழு நாட்களில் இந்த கால் ஆணி நீங்கும்.    வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த இலையை பறித்து வெறும் வாயில் மென்று தின்றால்  இரண்டொரு நாட்களில் வாய்ப்புன் பிரச்சனை தீரும்.               

சப்ஜி விதை என்று அழைக்கப்படும் இந்த செடியின் விதையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து பகலில் அந்த தண்ணீரில் சர்பத் கலந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும், மேலும்  வயிற்றுப் பிரச்சனைகள் ஏதேனும் இருப்பினும் மறைந்து குணமடையும்.                   

உடல் பருமன் உள்ளவர்கள் இந்த விதையின் ஊறவைத்து 48 நாட்கள் குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் மெலிந்து அழகும் உண்டாகும். இவ்வாறு பல நன்மைகளை தரும் இந்த திருநீற்றுப்பச்சிலையை நாமும் நமது வீட்டில் வளர்த்து பயன் பெறவேண்டும்.

Share.

Leave A Reply