54.  எருக்கை

எருக்கம் பூ விநாயகருக்கு  உகந்த பூவாக உள்ளது.

எருக்கம் பூ  .காட்டுப்பகுதிகளிலும்  தெரு ஓரங்களிலும்  அதிகம் காணப்படும்.ஏன் வீட்டில் வளராமல் காட்டுப்பகுதிகளிலும், தோட்டப் பகுதிகளிலும் ,  வளர்கிறது என்றால் இது இயற்கை கொடுத்த இயற்கை மருத்துவ குணம்  நிறைந்தது

 காட்டில் விஷப் பூச்சிகள் அதிகமாக காணப்படும் எதிர் பாராமல் பாம்பு  போன்ற விஷப்பூச்சிகள் கடித்து விட்டல் .எருக்கஞ் செடியில் இருந்து மூன்று இலைகளை  பறித்து  மென்று தின்றால் விஷம் இறங்கி விடும்.

வயிற்றில் அதிகமாக பூச்சி ஏற்பட்டு வயிற்று வலியால் துன்பப்படுபவர்கள் எருக்கம் இலைச்சாறு  மூன்று துளியுடன் பத்து துளி தேன் கலந்து உண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள்  வெளிவந்துவிடும் . பெரியவர்களுக்கு மட்டுமே இம்மருந்தை பயன்படுத்த  வேண்டும்.குழந்தைகளுக்கு கொடுக்க  கூடாது .

 காலில் முள் குத்தி வலி ஏற்பட்டாலும், புரை வைத்து புண்ணாக இருந்தாலும் முள் குத்திய இடத்தில் எருக்கம் பாலை வடிய விட்டால் முள் முறிந்து இருந்தாலும் வெளியில் வந்துவிடும் .

 குதிங்கால் வலி ஏற்பட்டால் எருக்கு இலையைப்  பறித்து தரையில் வைத்துக் கொண்டு குதிங்காலில் வைத்து அழுத்த வலி குறையும்.

 காது வலி ஏற்பட்டால் எருக்கம்  மொட்டைக் கசக்கி  சில சொட்டுகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.

எருக்கஞ் செடியின் பின்புறம் விளக்கெண்ணையைத் தடவி நெருப்பில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்துவிடும் .

அருகம் புல்லும்

எருக்கம் பூவும்  

தொடுத்து நல்மாலைகள்

அணி விப்போம்

கரும்பும் கனிபல

படைத் திடுவோம்

கணபதியை துதித்திடுவோம் .

எளிய மருந்துகள்

அருகம்புல் சாறு ,அரசமர  இலைச்சாறு இரண்டுமே சர்வ நிவாரணம் தரும் . எளிமையாக கிடைக்கும் இயற்கை தாவரங்கள் .

 மேலும், சோற்றுக் கற்றாழையில் உள்ள நடுப்பகுதி சாப்பிட உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியம் தரும் மருந்து .

கீரை வகைகள், பழங்கள், துளசி, வெற்றிலை போன்றவை நாள்தோறும் ஏதோ ஒன்று சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் எளிதாக கிடைக்கும்.

                                                  தொடரும்

Share.

Leave A Reply