77-பழிப்பன பகரேல்
விளையாட்டு வகுப்பில் எல்லோரும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
பிந்துவும், நந்துவும் ஓடிப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது நந்துவை பிந்து தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.
நந்து கீழே விழுந்து கையில் உரசி ரத்தம் வந்தது.
பிந்து எதையும் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டாள்.
கீழே விழுந்த நந்துவுக்கு கோபம் வந்து ஏன் தள்ளிவிட்டு ஓடுகிறாய் என திட்டினாள் பிந்துவை.
பிந்து தான் நந்துவை தள்ளிவிட்டு ரத்தம் வர வைத்தாள். ஆனால், தான் எதுவும் செய்யாதது போல்….
நந்து என்னைத் திட்டுகிறாள் என பிறரிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.
ஓடிவந்த நந்துவை தள்ளிவிட்டு கீழே விழுந்து அடிபட்டதையும் கவனிக்காமல். பிறரிடம் தன்மேல் பழி போடுவதை நினைத்து நந்துவுக்கு காய வலியை விட பேசியது வலியைத் தந்தது.
இதைத் தான் ஔவையார் “பழிப்பன பகரேல்” என்று பிந்துவைப் போல் உள்ளவர்களை நினைத்து கூறி இருக்கிறார் என நினைத்தாள் நந்து.தன் வலியை பொறுத்துக் கொண்டு.