79-பிழைபடச் சொல்லேல்
வசந்தி பேச ஆரம்பித்தால் போதும், ‘அவள்’ அப்படி ‘இவள்’இப்படி என அடுத்தவர்கள் செய்யும் குற்றங்களைப் பேசுவது என்றால் ‘அல்வா’ சாப்பிடுவது போல் பேசுவாள்.
அவளுக்கு நேர்மறையானவள் கலா. யார் மனமும் வருத்தம் ஏற்படாதபடி முகம் மலர்ந்து இனிய வார்த்தைகளை மட்டும் பேசுவாள்.
மற்றவரை துன்புறுத்தாத இனிய சொற்கள் இந்த பிறவிக்கு மட்டும் இல்லாமல், அடுத்த பிறவி எடுத்தாலும் இன்பத்தைக் கொடுக்கும் என்பதை…
புலவர் ஔவையார் பேசும் போது குற்றம் உண்டாகும் படி பேசாத என்பதை “பிழைபடச் சொல்லேல்” என்று கூறியிருக்கிறார்.