கயல்விழி அரண்மனையில் சந்தோசமாக இருந்தாள். வழக்கம்போல் விடிந்து வந்த பூதம் கயல்விழித் தேடியது.சிவலிங்கம் இருந்த இடத்தில் பள்ளமாக இருக்கவே, கயல்விழி பள்ளத்தில் விழுந்து இருக்கக் கூடும் என எண்ணிய பூதம். எல்லா இடமும் தேடியது. கயல்விழியை காணாமல் ஊரெல்லாம் சுற்றித் திரிந்தது. ஒரு நாள் புளிய மரத்தில் பூதம் சோர்வாக அமைந்து இருந்தது. அம்மரத்து அடியில் ஒரு குடியானவனும் அவன் மனைவியும் கஞ்சி குடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது, குடியானவனின் மனைவி நீ என் மேல் பிரியமாகவே இல்லை. என்னை பூதம் தூக்கிக் கொண்டு போகும் என்ற நிலை இருந்தால் பிரியமாக இருந்திருப்பாய்… திருட்டுத்தனமாக கட்டிக்கொண்ட மனைவி மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் நம் இளவரசர்.என சிணுங்கிக் கொண்டே கூறினாள். “அடச்சீ…உனக்கு பத்து வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. அவ ஒரே வருடத்தில் குழந்தைக்கு அம்மாவாகப் போகிறாளே” என்றான் குடியானவன். மேலே இருந்து இவர்கள் உரையாடலைக் கேட்ட பூதம் அப்படியா…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
“ஆறுவது சினம்” கோபம் வந்தாலும் சிறிது நேரத்தில் அமைதியாகி விட வேண்டும். உதாரணம்: நண்பர் தவறு செய்தால் உடனே கத்தாமல் அமைதியாகப் பேச வேண்டும்.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
“அறம் செய்ய விரும்பு” நல்ல செயல்களைச் செய்ய எப்போதும் விருப்பம் கொள்ள வேண்டும். உதாரணம்: நண்பருக்கு உதவி செய்வது நல்ல செயல். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
கையில் இருப்பதை எண்ணி நன்றி சொல்! கிடைக்காததை எண்ணி கவலைப்படாதே!இறைவன் கொடுத்த ஒவ்வொரு நாளும்! ஒரு புதிய வாய்ப்பு! நன்றியுடன் தொடங்கும் வாழ்க்கை!நிம்மதியுடன் முடியும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
என் வீட்டில் இருக்கும் அமைதி! என் குடும்பத்தின் சிரிப்பு! என் உடலின் நலம்! என் மனதில் நம்பிக்கை! இவை அனைத்திற்கும் இறைவா! உனக்கு நன்றி. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
இறைவனைத் தேடி! தொலைதூரம் செல்ல வேண்டியது இல்லை! அன்பு இருக்கும் இதயத்தில்! அவர் ஏற்கனவே குடியிருக்கிறார்! கருணையுடன் வாழ்ந்து பார்!கடவுளை உன்னுள் உணர்வாய். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
வழி தெரியாமல் நின்ற நேரத்தில்! வழிகாட்டியது இறைவன்! மனம் உடைந்த நேரத்தில்! ஆறுதலாக இருந்தது இறைவன்! இன்று நான் உயிர்த் தெழுப்பதற்கும்! அவரது அருளை காரணம். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
ஆத்திசூடி கதைகள்81- புகழ்ந்தாரைப் போற்றி வாழ் நிலவு தேயும், பின் வளரும். அதுபோலத்தான் வாழ்க்கையும். சில சமயம் துன்பமாக இருள் சூழ்ந்து இருக்கும். அதை தாண்டி வந்தால் ஒளிமயமான வெளிச்சம் வாழ்வில் வரும். இரண்டையும் காணாத மனிதர்களே இல்லை. இதில் எப்படி எதிர்நீச்சல் போட்டு வாழ்வது. இதுதான் நம்முன் இருக்கும் கேள்வி? என்று நிறுத்தினார் ஆசிரியர். ஆசிரியர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டுஇருந்தார்கள் மாணவர்கள். 1 + 1= 2 இன்பத்தைக் கூட்டிக் கொள். 1 – 1= 0 துன்பத்தைக் கழித்துக் கொள். என்ற ஆசிரியர் புரிகிறதா? என்றார் ஆசிரியர். புரியவில்லை என்றனர் மாணவர்கள். அதாவது, 1+1=2 இன்பத்தை சந்தோசமாக அனுபவித்துக் கொள். ஒன்று நீ, மற்றொன்று உன்னைப் புரிந்தவர்கள். அவர்கள் கொடுக்கும் உற்சாகம், ஊக்கம் அவர்களுடன் சேர்ந்து மேன்மை அடைவாய். 1-1=0 தீமை தரக்கூடியவர்களிடம் இருந்து விலகிவிடு. என்பதை புலவர் ஔவையார் “புகழ்ந்தாரைப்…
இறைவா!என்னை காப்பாற்றிய நாட்களுக்கு நன்றி! எனக்கு கற்றுக் கொடுத்த துயரங்களுக்கும் நன்றி! என்னை உயர்த்திய வெற்றிகளுக்கும் நன்றி! என்னை மாற்றிய தோல்விகளுக்கும் நன்றி! எல்லாமே உன் அருள் என்று உணர்கிறேன். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
என் பிரார்த்தனைக்கு தாமதம் இருக்கலாம்! ஆனால் இறைவனின் கருணைக்கு தாமதம் இல்லை!அவர் நேரம் வரும் வரை காத்திரு! அவசரத்தில் நம்பிக்கை இழக்காதே! காத்திருப்பதும் ஒரு பக்தி தான்! நன்றியால் மனதை நிறைத்துக் கொள். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.