Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

“மூர்க்கரை மூர்க்கரே முகப்பர்” என்ற பழமொழிப் படி நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம் என்றவர்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் பேசி வீர,தீர செயல்களை சொல்லிக் கொண்டார்கள். நாம் ஒரே தொழில் செய்பவர்கள். எனவே, இனி ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் என ஒப்பந்தம் செய்து கொண்டனர். பிறகு இருவரும் ஒரே திசையில் நடக்கத் தொடங்கினார்கள். வெகு தூரம் நடந்த பின் ஒரு காடு வந்தது. அந்தக் காட்டில் நடுவில் ஒரு குடிசை தெரிந்தது. அங்கு சென்று சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம் என இருவரும் அக்குடிசையை நோக்கிச் சென்றார்கள். அக்குடிசையில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். பார்ப்பதற்கு சாது போல் தெரியும் அந்தப் பாட்டி மிகவும் சாமர்த்தியமான கில்லாடி.இல்லை என்றால் இந்த காட்டில் தன்னந்தனியாக வாழ முடியுமா? அந்தக் காட்டில் பச்சைப்புல் அதிகமாக இருப்பதால் மாடு மேய்க்க, புல் அறுக்கு வருபவர்கள் அதிகம். வழிப்போக்கர்கள், திருடர்கள் கூட அங்கு வந்து பசியாறி, தங்கிச்…

Read More

11-எத்தனுக்கு எத்தன் மாலை நேரம் வந்து விட்டால் சிறுவர்களுக்கு கொண்டாட்டம்தான். தாத்தாவிடம் கதை கேட்க கூடிவிட்டனர் அவர் முன். அப்பளக்குடுமி தாத்தாவும் கதை சொல்ல தயாரானார் அப்போது… அழுது கொண்டே வந்தாள் சுமித்ரா. இங்கே வாம்மா! என அழைத்த தாத்தா, “ஏன் அழுகிறாய்?” என அருகில் அமர வைத்தார். தாத்தா ஊரிலிருந்து மாமா வந்திருந்தார். அவர் போகும் போது ஐந்து ரூபாய் தந்து விட்டுச் சென்றார். என்றவள், மூக்கை உறிஞ்சிக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தாள் சுமித்ரா. கண்ணீரைத் துடைத்துவிட்ட தாத்தா ‘ம்’ மேலே சொல்லுமா என்றார். அந்த ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கினேன். மீதி கடைக்காரர் கொடுத்தார் நான் பத்து ரூபாய் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு ஐந்து ரூபாய் ஐம்பது பைசா கொடுத்துவிட்டார். ஐம்பது பைசா தானே கொடுக்க வேண்டும். ஐந்து ரூபாயும் கொடுத்து விட்டார்களே என நினைத்தேன்.திருப்பிக் கொடுக்க மனம் இல்லாமல் கொண்டு வந்து விட்டேன். வரும்போது.. வரும்போது…

Read More

“ எண் எழுத்து இகழேல்” படிப்பையும், எழுத்தையும் அலட்சியப் படுத்தாதே! உதாரணம்: தினம் சிறிது நேரம் படிக்க வேண்டும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

10-பேராசை பெரும் நஷ்டம் சூரியன் மறையத் தொடங்கினான். பள்ளிக்கூடம் போய் வந்த களைப்பு போகும் முன் தாத்தா கதை சொல்லிவிடுவார் என ஓடி வந்தார்கள் குழந்தைகள். தாத்தா இன்னும் வரவில்லை என அறிந்ததும், வட்டமாக அமர்ந்தார்கள். செந்தில் கையில் வைத்திருந்த மிட்டாயில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவன், மற்றொன்றை எடுத்து பக்கத்தில் அமர்ந்திருந்த தண்டபாணியிடம் கொடுத்தான். தண்டபாணியும் வாங்கி சாப்பிட்டவன் மிட்டாய் நல்லா இருக்கவே செந்திலிடம் இருந்து மிட்டாயை எடுக்கப் போனான். அந்த சமயம் அங்கு வந்த தாத்தா அதைப் பார்த்துவிட்டார். பிறர் பொருளுக்கு ஆசை வைத்தால் இறைவன் தண்டிப்பான் என்றவர் குழந்தைகளுடன் தானும் அமர்ந்து கொண்டார். “அது எப்படி தாத்தா இறைவன் தண்டிப்பார்” எனக் குழந்தைகள் கேள்வி கேட்டனர். “சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்” என்றார் தாத்தா. எல்லா குழந்தைகளும் அமைதியாக ஆர்வத்துடன் தாத்தா முகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். ***** ஒரு ஊரில் வேலப்பன்…

Read More

“ஊக்கமது கைவிடேல்” முயற்சி செய்யும் தைரியத்தை ஒருபோதும் விட்டு விடாதே உதாரணம்: கணக்கு வரவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்.  இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“உடையது விளம்பேல்” உன்னிடம் இருப்பதை பற்றி பெருமையாகப் பேசாதே! உதாரணம்:புதிய பொம்மை கிடைத்தாலும் அதை வைத்து மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதே! இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“ ஈவது விலக்கேல்” பிறருக்குக் கொடுப்பதை தடுக்காதே! உதாரணம்: உன்னிடம் இருக்கும் உணவை நண்பருடன் பகிர்ந்து கொள். அதை தடுக்காதே!இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

ஆத்திசூடி கதைகள் 82-பூமி திருத்தியுண் லட்சுமி தங்கை பானு சின்ன கிராமத்தில் வசித்து வந்தாள். அவளைப் பார்க்க பள்ளி விடுமுறையில் தனது மகள் ராதாவை அழைத்துக் கொண்டு சென்றான் லட்சுமி. இவர்களைப் பார்த்த சந்தோசத்தில் பானு அக்காவையும், ராதாவையும் கட்டிக் கொண்டு வாங்க என்றவள் ராதாவை தூக்கி முத்தமிட்டாள். மாமா வரவில்லையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள் பானு.மாமாவிற்கு விடுமுறை கிடைக்கவில்லை. கிடைத்ததும் வருவார் என்றாள் லட்சுமி. குடிக்க மோர் கொடுத்தவள். பக்கத்தில் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் பானு. பார்க்க பசுமையான அந்த இடம் வயலின் அறுவடைக்கு தயாராக இருந்தது நெல். மா, கொய்யா, கொடுக்காய் மரங்கள், புளிய மரங்களும் வயல் வரப்பு ஓரம் இருந்தது. ஒரு பகுதியில் கீரை, வெண்டை, பூசணி,அவரை, தக்காளி, கத்தரிக்காய், செடிகள் இருந்தது. ராதா துள்ளிக் கொண்டு ஓடிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அக்காவும், தங்கையும் பேசிக் கொண்டே சமையலுக்கு வேண்டிய…

Read More