Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

“ சனி நீராடு”உடலைத் தூய்மையாக வைத்துக் கொள். உதாரணம்: சனிக்கிழமை தோறும் எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“ஙப்போல் வளை” பெரியவர்களிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொள். உதாரணம்: பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து நட. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“கண்டொன்று சொல்லேல்” பார்த்ததை மாற்றிப் பொய்யாகச் சொல்லாதே. உதாரணம்:உண்மையை மட்டுமே பேசு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“அஃகஞ் சுருக்கேல்” விற்கும் தானியத்தின் அளவு குறைத்து விற்கக் கூடாது. உதாரணம்: அளவை குறைக்காமல் சரியாக அளந்து தானியத்தை விற்க வேண்டும். இசைகலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

நீ மட்டும் என்னை மோசம் செய்யலாமா? என்றான் கந்தசாமி. பிறகு இருவரும் கூடிப் பேசி நம்மை ஏமாற்றிய பாட்டியை ஏமாற்ற வேண்டும் என முடிவு செய்தார்கள். தந்திரக்கார பாட்டி இவர்கள் தங்களை ஏமாற்றுவதற்குள் தான் முந்திக் கொள்ள வேண்டும். என ஒரு திட்டம் போட்டாள். மறுநாள் இருவரையும் அழைத்த பாட்டி அழகிய வேலைப்பாடு நிறைந்த ஒரு பழைய பெட்டியைக் காட்டினாள். அப்பெட்டியில் இரண்டு பூட்டுகள் இருந்தன. ஒன்றைத் திறந்து காண்பித்தாள். அதில் பழங்கால நகைகள் பளபளத்தன. மற்றொரு பூட்டைத் திறந்து காண்பித்தாள். அதில் இரத்தினமும், தங்கக்காசும் கண்ணைப் பறித்தது. மீண்டும் பெட்டியை மூடிய பாட்டி, எனக்குப் பின் எல்லாம் உங்கள் இருவருக்கும்தான் கவனமாக வேலை செய்து மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறினாள் பாட்டி. பொன்னையும், இரத்தினத்தையும் கண்டவுடன் எத்தர்களின் ஆசை அதிகமானது. சமயம் பார்த்து பாட்டியை ஏமாற்றி அப்பெட்டியை திருடிச் செல்ல திட்டமிட்டு இருந்தார்கள். அதனால்,…

Read More

“ஔவியம் பேசேல்” பொறாமையால் பிறரை பற்றி தவறாகப் பேசாதே! உதாரணம்: நீ அறியாத விசயங்களை அவதூறாகப் பேசாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“ ஓதுவது ஒழியேல்” படிப்பதை ஒருபோதும் நிறுத்தாதே! உதாரணம்: தினமும் ஒரு புதிய விசயத்தைக் கற்றுக்கொள். இசைகலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“ஒப்புரவு ஒழுகு” எல்லோரிடமும் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொள்.உதாரணம்: வகுப்பில் அனைவரிடமும் நட்பாக இரு.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

84-பெரியாரைத் துணைகொள் ராமு ஒரு கட்டிட தொழிலாளி. சிறுவயதிலேயே தந்தையர் இறந்து விட்டார். அம்மா வீட்டு வேலைகள் செய்து படிக்க வைத்தாள். வீட்டுக்கு பக்கத்தில் இன்ஜினியர் குடியிருந்தார். ராமுவை கூப்பிட்டு வேலைகள் கொடுப்பார்.ராமு மிகச் சரியாக செய்து முடிப்பான். இப்படி போய் கொண்டு இருந்தது. ஒரு நாள் ராமு என்னுடன் வேலைக்கு வருகிறாயா? என்றார் இன்ஜினியர் பாபு.சரி சார் என்ற ராமு அவருடன் சென்றான். கட்டிட வேலைகளை பாபு சொல்வது போல் ராமு மிக நேர்த்தியாக செய்தான். படிப்படியாக எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டான் ராமு. பாபு ஒரு நாள் ராமுவை வீட்டிற்கு அழைத்தார். ராமுவும் உடனே வந்து நின்றான். ராமு ஒரு புதிய கட்டிட வேலை வந்திருக்கிறது. அதை நீ தான் முழுமையாகச் செய்யப் போகிறாய் என்றவர் முன் பணத்தை கையில் கொடுத்தார் பாபு.சரி சார் என்ற ராமு காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டு முன்பணத்தைப் பெற்றுக்…

Read More

“ஐயமிட்டு உண்” கருத்து: ஏழைகளுக்கும் வேலை செய்ய முடியாதவர்களுக்கும் கொடுத்து உதவு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More