ஆத்திசூடி கதைகள்
81- புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
நிலவு தேயும், பின் வளரும். அதுபோலத்தான் வாழ்க்கையும்.
சில சமயம் துன்பமாக இருள் சூழ்ந்து இருக்கும். அதை தாண்டி வந்தால் ஒளிமயமான வெளிச்சம் வாழ்வில் வரும்.
இரண்டையும் காணாத மனிதர்களே இல்லை.
இதில் எப்படி எதிர்நீச்சல் போட்டு வாழ்வது. இதுதான் நம்முன் இருக்கும் கேள்வி? என்று நிறுத்தினார் ஆசிரியர்.
ஆசிரியர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டுஇருந்தார்கள் மாணவர்கள்.
1 + 1= 2 இன்பத்தைக் கூட்டிக் கொள்.
1 – 1= 0 துன்பத்தைக் கழித்துக் கொள்.
என்ற ஆசிரியர் புரிகிறதா? என்றார் ஆசிரியர்.
புரியவில்லை என்றனர் மாணவர்கள். அதாவது,
1+1=2 இன்பத்தை சந்தோசமாக அனுபவித்துக் கொள்.
ஒன்று நீ, மற்றொன்று உன்னைப் புரிந்தவர்கள். அவர்கள் கொடுக்கும் உற்சாகம், ஊக்கம் அவர்களுடன் சேர்ந்து மேன்மை அடைவாய்.
1-1=0 தீமை தரக்கூடியவர்களிடம் இருந்து விலகிவிடு. என்பதை புலவர் ஔவையார் “புகழ்ந்தாரைப் போற்றி வாழ்” அவர்களை மதித்து நீ வாழ வேண்டும் என்கிறார், என்றார் ஆசிரியர்.
இப்போது புரிந்தது சார் என ஒருமித்த குரலில் கூறினார்கள் மாணவர்கள்.