Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

85-பையலோ டிணங்கேல் பாலும் முன் வரிசையில் இருந்தான். மற்ற மாணவர்களைப் போல் பேசி அரட்டை அடிக்க முடியாது. அவன் கவனம் எல்லாம் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது அவன் ஆழ்மனதின் எண்ணம். அவன் அப்பா சாதாரண தொழிலாளி. அவர் படும் கஷ்டத்திற்கு பாலுவை படிக்க வைப்பது பெரிய விசயம். இது தெரிந்தும் சில மாணவர்கள் அவனைப் படிக்க விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். அவர்களிடம் மோதினால் நமக்கு நல்லது அல்ல என்பதை நன்கு உணர்ந்து இருந்தான் பாலு. ஏதோ ஒரு காரணம் சொல்லி அந்த இடத்தை விட்டு போய்விடுவான் பாலு.“பையலோ டிணங்கேல்” என்ற புலவர் ஔவையார் அமுதமொழி போல் அவர்களுடன் சேராமல் ஒதுங்கிப் போய் விடுவான் பாலு.

Read More

கிணற்றில் தண்ணீர் தெளிவாக இருந்தது அதில் முகம் தெரிந்தது அது கண்ட கல்யாணி “சுதா உன் நகைகளை எனக்குப் போடேன், எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றாள். சித்தி இப்போதுதான் அன்பாகப் பேசுகிறாள், அதை ஏன் கெடுக்க வேண்டும் என நினைத்த சுதா நகைகளை கழற்றிக் கொடுத்தாள். நகைகளை போட்டுக் கொண்ட கல்யாணி கிணற்று தண்ணீரில் பார்த்தாள். குறுக்கு மூளை அப்போதும் “பளிச்”என வேலை செய்தது. இந்த கிணற்றில் இவளைத் தள்ளிவிட்டால் என்ன என்று. உடனே செயல்பட ஆரம்பித்தாள் கல்யாணி. “சுதா எனக்கு எப்படி இருக்கு என்று தண்ணீரில் பார்” என்றாள் கல்யாணி. “சரி சித்தி” என்றவள் எட்டிப் பார்த்தாள்.அடுத்த வினாடி அவள் கால்கள் இரண்டையும் வாரிவிட்டாள் கல்யாணி. அம்மா…! என அலறிய படி கிணற்றுக்குள் விழுந்தாள் சுதா.அவள் அழறல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் இருந்த ஐந்து தலை நாகம் மேலே வந்து தனது உடலால் தாங்கிப் பிடித்துக் கொண்டது. எந்த…

Read More

“வஞ்சகம் பேசேல்” ஏமாற்றும் வார்த்தைகளைப் பேசாதே. உதாரணம்: நண்பனை ஏமாற்றிப் பொருள் வாங்காதே . இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.

Read More

மன்னரின் முகம் மலர்ந்தது. காவலா! என அழைத்தார் மன்னர். என்ன அரசே! என அடுத்த நொடியில் வந்த காவலாளி பணிவுடன் நின்றான். “ஒரு லட்சம் பொற்காசுகள் வாங்கி வா” என கட்டளை இட்டார் மன்னர். திரும்பி வரும்போது பொற்காசுகளுடன் வந்தான். ஒரு வேலையாளிடம் கொடுத்த மன்னர். இந்த மூட்டையை எடுத்துச் சென்று, பெண் தருபவர் உண்டா? எனக் கூவிச் சென்று தருபவர் யாராவது இருந்தால் அழைத்து வாருங்கள் எனக் கட்டளையிட்டார் மன்னர். “அப்படியே ஆகட்டும் அரசே” என பணிவுடன் வேலையாள் விடைபெற்றான். மந்திரியும் விடைபெற்றுச் சென்றார். பொற்காசுகளைச் சுமந்து கொண்டு சென்ற வேலையாள் மீன் ராஜாவுக்கு பெண் தருபவர் உண்டா? மீன் ராஜாவிற்கு பெண் தருபவர் உண்டா? எனக் கூவிக் கொண்டே ஒவ்வொரு ஊராகச் சுற்றி வந்தான். ஒரு லட்சம் பொற்காசு என்றால் ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், பெண்ணை எப்படி மீனுக்கு திருமணம் செய்து வைப்பது எனப் பெற்றோர் பின் வாங்கினார்கள்.…

Read More

“மண் பறித்து உண்ணேல்” பிறருடைய பொருளைத் திருடி வாழாதே . உதாரணம்: நண்பரின் பொருளை அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“பருவத்தே பயிர் செய்” சரியான நேரத்தில் சரியான செயலைச் செய். உதாரணம்: தேர்வுக்கு முன்பே படிக்கத் தொடங்கு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“தந்தை தாய்பேண்” பெற்றோரை அன்புடன் கவனித்து மதிக்க வேண்டும்.உதாரணம்: அம்மா, அப்பாவுக்கு தேவையான நேரத்தில் உதவி செய். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

12-மீன் ராஜா தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது…. ஓடி வந்தாள் உமா. அவள் முகம் எல்லாம் வேர்த்து, கண்கள் சிவந்து இருந்தது. துணிகள் ஆங்காங்கே நனைந்து இருந்தது. உமாவை பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டார் தாத்தா. உமாவிற்கு அம்மா இல்லை. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் உமாவுக்கு சனி திசை தான். சிறுமி உமாவை வேலை வாங்கிக் கொண்டே இருப்பாள் அவள் சித்தி. உமாவும் அவளுக்கு செய்ய முடியாத வேலையை எல்லாம் கஷ்டப்பட்டு செய்து கொண்டிருந்தாள். இப்போது கூட வேலையை செய்துவிட்டு வந்திருப்பாள. என நினைத்த தாத்தா உமாவை அருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டவர்.குழந்தைகளே! கவனியுங்கள், ஒரு கதை சொல்லப் போகிறேன் என்றவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் ராமுவும் ரமாவும் வாழ்ந்து வந்தார்கள். ரமா கர்ப்பவதி ஆனாள். பிரசவ காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. ரமா இறந்துவிட்டாள். உறவு என்று…

Read More

“இடம்பட வீடு எடேல்” உன் தேவைக்கு ஏற்ற அளவில் வாழ கற்றுக்கொள். உதாரணம்: தேவை இல்லாத பொருட்களை வாங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

“ஞயம்பட உரை” இனிமையாகவும், நியாயமாகவும் பேசு. உதாரணம்: கோபமாக பேசுவதற்குப் பதிலாக அன்பாகப் பேசு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More