ஆத்திசூடி கதைகள்
82-பூமி திருத்தியுண்
லட்சுமி தங்கை பானு சின்ன கிராமத்தில் வசித்து வந்தாள்.
அவளைப் பார்க்க பள்ளி விடுமுறையில் தனது மகள் ராதாவை அழைத்துக் கொண்டு சென்றான் லட்சுமி.
இவர்களைப் பார்த்த சந்தோசத்தில் பானு அக்காவையும், ராதாவையும் கட்டிக் கொண்டு வாங்க என்றவள் ராதாவை தூக்கி முத்தமிட்டாள்.
மாமா வரவில்லையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள் பானு.
மாமாவிற்கு விடுமுறை கிடைக்கவில்லை. கிடைத்ததும் வருவார் என்றாள் லட்சுமி.
குடிக்க மோர் கொடுத்தவள். பக்கத்தில் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் பானு.
பார்க்க பசுமையான அந்த இடம் வயலின் அறுவடைக்கு தயாராக இருந்தது நெல்.
மா, கொய்யா, கொடுக்காய் மரங்கள், புளிய மரங்களும் வயல் வரப்பு ஓரம் இருந்தது.
ஒரு பகுதியில் கீரை, வெண்டை, பூசணி,அவரை, தக்காளி, கத்தரிக்காய், செடிகள் இருந்தது.
ராதா துள்ளிக் கொண்டு ஓடிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அக்காவும், தங்கையும் பேசிக் கொண்டே சமையலுக்கு வேண்டிய கீரை,காய்களைப் பறித்துக் கொண்டு திரும்பினார்கள்.
சமைத்து பரிமாறினாள் பானு.
சமைத்த உணவின் மணமும், சுவையும் லட்சுமியையும், ராதாவையும் மனம் மகிழச் செய்தது.
கடையில் வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கும், தோட்டத்தில் விளைந்த உணவை சமைத்து சாப்பிடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்ற லட்சுமி…
ஔவையார் “பூமி திருத்தியுண்” என்று கூறியதன் உண்மை இன்று உணர்கிறேன் பானு. நீ கொடுத்து வைத்தவள் என்றாள் தங்கையைப் பார்த்து.
ஆமாம் அக்கா! சுயமா நாம் வேலை செய்த அதன் பலனை அனுபவிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி அக்கா என்றாள் பானு.