ஐந்தாம் அத்தியாயம்-தொடர்ச்சிகர்ம சன்யாச யோகம்கேசவா/ பிராண, அபான வாயுக்களைச் சீராக வைப்பது எவ்வாறு என விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .அர்ஜுனா /பிராண, அபான வாயுக்களின் போக்கு இயல்பாகவே தாறுமாறாக இருக்கும்.அவற்றை சீராக இருக்கச் செய்தால் சஞ்சலம் அமைதியின்மை தாமே அழிந்து விடும்.அவன் இயல்பாக பகவானை தியானம் பண்ணுவான். பிராண , அபான வாயுக்களை சமப்படுத்துவதற்கு வழி முதலில் இடது நாசி மூலம் அபான வாயுவை உள்ளே இழுத்து வலது நாசி மூலம் பிராண வாயுவை வெளியே தள்ள வேண்டும்.பிறகு, அபான வாயுவை வலது நாசி மூலம் உள்ளே இழுத்து பிராண வாயுக்களைச் சீராக்கும் பயிற்சி செய்யும்போது பகவத் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும். வாயுவை வெளிப்படுத்தும் போதும் உள்ளிழுக்கும் போதும் சரியான சீரான ஒரே விநாடிக் கணக்கில் செய்வதுடன் அந்தப் போக்குவரத்தை சமமாகவும், கொஞ்சம் .,கொஞ்சமாக நுட்பமாகவும் செய்ய வேண்டும்.மூச்சுவிடுவதும், உள்ளிழுப்பதும் சமமாகவும் அமைதியாகவும் நுட்பமாகவும் ஆகிவிடும்போது மூச்சு வெளியிலே…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
காற்றொழில் தந்த காமதேனு கந்தனேகாலடிப் பற்றி கடமை செய்கிறேன்மாற்றுதல் தந்த கற்பகத்தரு முருகாமயிலம் முருகனே மலரடி பணிந்தேன்பாற்பட்டார் வழியில் வழிகாட்டும் குருவேபாக்கியம் செய்தேன் உன்பின் தொடரவேஏற்றம் தந்ததமிழ் முதல் கடவுளேஎன்றும் பணிவேன் உன்தாழ் மலரே விண்மீனாய் இருக்கும் கார்த்திகை முருகாவளமான வாழ்விற்கு அச்சாணி நீதான்கண்போல பக்தரைக் காக்கும் முருகாகற்கண்டாய் இனிக்கும் உன்பெயர் சொன்னால்சண்முகா சரவணா சங்கடம் தீர்ப்பவனேசந்தனமாய் மணக்கும் உனைநினைக் கும்மனம்திண்ணமாய் சொல்லும் தீர்க்க தரிசியேதிசையெல்லாம் பரவும் உன் புகழே படிப்படி யாய்ஏறி உன்வாயில் வரவேண்டும்பக்கம் நீவந்து அருளைத் தரவேண்டும்அடிவேராய் இருந்து அகிலத்தை ஆள்பவனேஆயிரம் மாற்றம் தந்தே காக்கவேண்டும்வடிவேலா வரம் நீஎனக்குத் தரவேண்டும்வாடாமல் உலகத்தார் வளர்ச்சி பெறவேண்டும்குடிகாக்கும் முருகா தமிழ் அமுதம்குவலயத்து மக்கள் எல்லாம் பெறவேண்டும் .
மருத்துவத் தொடர்-59 பாகற்காய்பாகற்காய் பார்க்க அழகாக இருக்கும் சுவைத்தால் கசப்பாக இருக்கும் .பாகற்காய் கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த காய் .வயிற்றில் ஏற்படும் பூச்சிகளை அழிக்கக்கூடிய குணம் உடையது. பாகற்காய் கொடியில் உள்ள இலைகளை பறித்து சாறு எடுத்து குடித்தால் வயிற்றுப் பூச்சி வெளிவந்து விடும். வயிற்றுவலி குணமாகும் .பாகை இலை கிடைக்காதவர்கள் பாகற்காய் கொட்டையை அரைத்து பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சி வெளிவந்து விடும்.பாகற்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரழிவு நோய், வயிற்றுவலி, வயிற்றுப்பூச்சி இவைகள் வராமல் தடுக்கலாம் .நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாகற்காய் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் கட்டுக்குள் இருக்கும்.பாகற்காய் குழம்பு, மண்டி , வறுவல், தொக்கு செய்து சாப்பிடலாம் .’பாகற்காயை வறுத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். கசப்பு அதிகம் இருக்காது. பெரியவர்கள் அதிகம் மண்டி, பச்சடி, குழம்பு செய்து சாப்பிடுவது நல்லது…
கேசவா ”இம்மனிதப் பிறவியிலேயே ”என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா தேவர்கள், மனிதப் பிறவியில் உல்லாசமும், புலன் நுகர்ச்சியும் அதிகமாக இருக்கும்.விலங்கினப் பிறவிகள் அறிவீனம் மிக்கதாக இருக்கும். எனவே , காம குரோதங்களை வசப்படுத்துவது முடியாத காரியமாக இருக்கும். மனிதப் பிறவி வாய்ப்பது அரிது. இந்த உடல் அழிவதற்குள் காம, குரோதங்களின் வேகத்தை மன அமைதியோடு பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெறவேண்டும். அஜாக்கிரதையினாலும் , அலட்சியத்தினாலும் இந்த அரிய மனித வாழ்வைச் சிற்றின்பங்களில் கழித்து விட்டால் பிறகு மிகவும் வருத்தப்படவேண்டும். மனிதப் பிறவியில் பகவானை அறிந்து விட்டால் நல்லது அறியாமல் போனால் மிகப்பெரிய நஷ்டமாகும்.உடல் அழியக்கூடியது .எப்போது மரணம் நேரும் என்பது தெரியாது.மரண நேரம் நெருங்கும் முன்னரே காம, குரோதங்களை ஜெயித்து விடவேண்டும். தடுமாற வைக்காதவாறு தடுத்து நிறுத்தும் ஆற்றலைப் பெற வேண்டும். கடலில் வந்து கலக்கும் ஆறுகள் அனைத்தும் வேகத்துடன் மறைந்து விடுவது போல…காம, குரோதங்கள்…
கவிதை -கவிஞர் செந்தமிழ் வாணி ச. மல்லிகா . கொரோனா தொற்று வேப்பெண்ணை மருந்து நாடு வளர நாடு விரிவுபடுத்த அண்டை நாட்டை அடக்க அணுகுண்டு வீடு வளர வெளிநாடு செல்ல அன்னிய மொழி கற்று பயணம் ஈடு தாங்கி தகுதி வளர்த்து தனிமைப் பட்டு அன்னிய நாட்டில் ஈன்றாள் பிரிந்து இன்னல் பொறுத்து இல்லாள் நினைவில்; வேலை செய்ய சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் கொன்றது பல உயர்களை அசுரவேகத்தில் தீனம் தொட்ட கரங்களில் பரவி தொற்று நோயாய் பரவியது உலகில் வினயம் செய்ததோ சீனா தன்செயல் தன்னை சுட்டு பிறரையும் சுடுகிறது மீட்டுதல் இந்த தருணத்தில் கடமை பரவாது தடுக்க அவசர நடவடிக்கை சித்தர்கள் செய்த மருத்துவ மகிமை சிறந்த தோர் தடுப்பு மருந்து மத்தித்தல் முறையில் வேப்பிலை பயன்படும் உடலில் வேப்பெண்ணை தேய்த்து தடவ நித்தம் அழிவை நித்தன் காப்பான் தமிழர் பண்பாடு வணக்கம் சொல்தல் சித்தன்…
57. சோற்றுக் கற்றாழை கற்றாழை வகையைச் சேர்ந்தது சோற்றுக் கற்றாழை. சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது . குழந்தை பிறந்து தொட்டில் கட்டும் போது கற்றாழைச் செடி ஒன்றை தொட்டிக்கு மேல் பக்கத்தில் கட்டுவார்கள் .சூரிய வெளிச்சம் பட்டாலே வளரும் செடியாகிய இச்செடியும் பசுமையாக வளர்ந்து கொண்டே இருக்கும். சோற்றுக் கற்றாழை புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியது .எனவே தான் ,குழந்தைகள் புத்துணர்வுடன் இருக்க குழந்தை பார்க்கும் இடத்தில் கட்டி வைக்கிறார்கள் . மேலும் புண், காயங்கள் ஏற்பட்டால் உடனே எடுத்து காயத்தில் போட்டால் குணமாகும் தன்மை உடையது .’ஆண்டி செப்டிக்’ மருத்துவக் குணம் இயற்கையாகவே சோற்றுக் கற்றாழையில் உள்ளது . மெலிந்து உடல் சூடு உள்ள சிறுவர்களுக்கு சோற்றுக் கற்றாழை மேல் பகுதி கீழ் பகுதியை சீவி எடுத்து விட்டு நடுவில் உள்ள வெண்மையாக இருக்கும் சதைப் பகுதியை எடுத்து பால் அல்லது மோரில் கலக்கி குடித்து வந்தால் சூடு…
கேசவா, ஒன்பதுவாயில்கள்என்பதனையும் ‘மனதிலிருந்துகர்மங்களைதுறப்பது’ என்பதையும்விவரியுங்கள்என்கிறான்அர்ஜுனன் . அர்ஜுனா, புலன் அடக்கத்தைத்தான் ஒன்பது வாயில்கள் என்று குறிப்-பிட்டேன்.மேலும் எல்லா கர்மங்களையும் விட்டுவிட்டால் அன்றாட வாழ்க்கை கூட நடக்காது ஆகவே, விவேகத்தோடு செய்கிறேன், செய்விக்கிறேன் என்ற எண்ணத்தை விளக்குவதுதான் சாங்கிய யோகியின் தியாகம் ஆகும் . இக்கருத்தை தெளிவாகக் காட்டுவதற்காகவே மனதில் இருந்து கர்மங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னேன் என்றவர் … மனிதர்களுக்கு கடவுள் என்னும் தன்மையை உண்டு பண்ணுவதில்லை ,கர்மங்களையும் உண்டு பண்ணுவதில்லை , கர்மங்களையும் சேர்த்து வைத்ததையும் ஏற்படுத்துவதில்லை இயல்புகள்தான் செயல்படுகிறது . கேசவா, உலகத்தைப்படைப்போனாகியபகவான்செய்வதில்லைஎன்றுகூறுவதன்கருத்தைவிவரியுங்கள்என்கிறான்அர்ஜுனன் . அர்ஜுனா, எங்கெல்லாம் படைத்தல் முதலான கர்மங்களைச் செய்கிறவர் என்ற பேச்சு வருகிறதோ , அங்கெல்லாம் அது சகுண பிரம்மதனத்தை தான் குறிக்கும்.. மனிதனிடம் ‘தான்’ செய்பவன் என்ற எண்ணத்தை உண்டாக்குவதில்லை.மனிதன் தான் செய்யும் காரியங்களில் கர்த்தா என்ற அபிமானம் கொண்டான் .ஆனால் அதற்கு நான் பொறுப்பு அல்ல . அஞ்ஞானியான மனிதன்…
விளையாடு கண்ணு விளையாடு விரும்பி நீயும் விளையாடு சேர்ந்து நீயும் விளையாடு சோம்பல் படாமல் விளையாடு ஆடி ஓடு விளையாடு ஆசை தீர விளையாடு சண்டை ஏதும் போடாமல் சமரசமாய் நீ விளையாடு விழுந்து விழுந்து எழுந்தாலும் விடாமல் நீ விளையாடு தோல்வி என்பதை சமமாக ஏற்றுக் கொண்டு விளையாடு மாலை நேரத்தில் விளையாடு மனம் நிறைந்து விளையாடு சிரித்துப் பேசி விளையாடு சிகரம் தொட விளையாடு
கடுக்காய் கடுக்காய், செங்கடுக்காய், வரிகடுக்காய், பால் கடுக்காய் என உள்ளன. ஐந்து சுவைகள் கடுக்காயில் அடங்கியுள்ளன (உப்பு தவிர்த்து ). வாதம் , பித்தம், கபம் போக்குவதால் மனிதனின் அமிழ்தம், காயகல்பம் என்றும் சொல்லலாம். முப்பிணிகளை நீக்குவதில் முதன்மை பெறுவது கடுக்காயாகும். மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படுபவர்கள் கடுக்காயை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் .மூக்கில் இரத்தக்கசிவு வரும்போது சிறிது பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினால் ரத்தக்கசிவு நின்றுவிடும் .இவ்விதமாகச் செய்து வந்தால் நாளடைவில் ரத்தம் வருவது நின்றுவிடும் . கடுக்காய் பொடி, காசுகட்டிப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து பசு வெண்ணெயில் குலைத்து உதடு, நாக்கு புண்களுக்கு காலை மாலை இரண்டு முறை போட்டு வந்தால் புண் ஆறிவிடும் . பல்வலி, உள்ளவர்கள் சுக்கு, காசுக்கட்டி,கடுக்காய்தோல் சம அளவு எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்தினால் பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக்கசிவு நீங்கும் , வலி குறையும். உடலில் புண் ஏற்பட்டு…
கேசவா / ஞானத்தைப் பெறுவதற்கு சிரத்தையும், ஒருமைப்பாடும் அவசியம் என்றீர்கள் அதனை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் , கிருஷ்ணா/ நீங்கள் கர்மங்களுடைய சந்யாசத்தைப் பற்றியும், பின்னர் கர்மயோகத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசுகிறீர்கள் .இவை இரண்டில் எந்த ஒன்று எனக்கு நிச்சயமாக மேன்மையைத் தரக்கூடியதோ அதைச் சொல்லுங்கள் என்கின்ற அர்ஜுனன் ….. ‘கிருஷ்’ என்றால் ஈர்ப்பது ‘ண’ என்றால் பரமானந்த சுரூபன் என்று பொருள் அனைத்தையும் தன் பால் ஈர்க்கின்ற கிருஷ்ணா / என அளித்த அர்ஜுனன் …. ”நீங்கள் எல்லா வல்லமையும் படைத்தவர் எல்லாம் அறிந்தவர் .பரமேசுவரன்.ஆகவே, உங்களால் மட்டுமே என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்” என்று குறிப்பிடுகிறான் அர்ஜுனன் . சன்சாயசம், கர்மயோகம் இரண்டுமே மிகவும் மேன்மையைத் தருபவை. கர்ம சன்யாசம் என்றால் ‘ஞானயோகம் ‘ கடமைகளைச் செய்து கொண்டே துறப்பதாகும். கர்மயோக, ஞானயோகம் இரண்டையும் ஒருங்கே புகழ்கிறீர்கள் .அவை வேறு வேறானவை என்றும் சொல்கிறீர்கள் .இவை…