331. நில்லாத  வற்றை நிலையின  என்றுணரும்

      புல்லறி வாண்மை  கடை

நிலையில்லாதவற்றை நிலைமையை உறுதி செய்து மூங்கில் போல் வளைந்து கொடுத்து வாழ்தல் எல்லையாகும் .

332. கூத்தாட்டு அவைக்குழாத்   தற்றே பெருஞ்செல்வம்

     போக்கும் அதுவிளிந்  தற்று .

நாடக அரங்கில்  இசைக்குழல் பேருணர்வைத்தரும் ,அரசன், தலைவர்களுக்கு .பழக்கமாகி தொடர்ந்தால் செல்வம் குறைந்து  போகும் தன்மை உடையது .

333.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

     அற்குப ஆங்கே செயல் .

நிலை இல்லாத செல்வம் பெற்றுவிட்டால் நிலை பெறுதலாகிய அறம் செய்ய வேண்டும் .

334,நாளென  ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

     வாளது உணர்வார்ப்  பெறின்.

ஒன்றுபோல் காட்டும் நாள்காட்டி ஒரு புள்ளி இரு கூர்முள்காலத்தை உணர்த்துவது  போல நிலையில்லா செல்வம் அறிந்து ஒரு உயிர் இரு உடலாக இருக்கும் குடும்பத்தினர் அறம் செய்து வாழ்வர்.

335.நாச்செற்று  விக்குள்மேல் வாராமுன் நல்வினை

    மேற்சென்று  செய்யப் படும் .

மரணப் படுக்கையில் இருக்கும் போது, நாவால் பேச முடியாமல் விக்கல், மேல் மூச்சு  வந்து விடும்.அது வருவதற்குள் நல்ல மேன்மையான செயல்களைச் செய்ய வேண்டும்

336 .நெருநல்  உளனொருவன் இன்றில்லை என்னும்

       பெருமை உடைத்துஇவ்   வுலகு

நேற்று வாழ்ந்த ஒருவன் இன்று இல்லை என்று பெருமையாக நெகிழ்ந்து இவ்வுலகத்தார்  பேசும்படி வாழவேண்டும் .

337.ஒருபொழுதும்  வாழ்வது அறியார் கருதுப

      கோடியும்  அல்ல பல. .

ஞாயிறு ஒளி பலருக்கும் பயன்பட்டு வாழ்வது போல் வாழத் தெரியாமல் வாழ்பவர் , பயனற்ற எண்ணங்கள் கோடியையும்  தாண்டி பயனற்றுப் போவர் .

338. குடம்பை  தனித்து ஒழியப்  புள்பறந் தற்றே

       உடம்போடு  உயிரிடை நட்பு .

முட்டை கூடு உடைந்து கிடக்க  பறந்து போகும் பறவைபோன்று உடம்பும், உயிரும் நிலையாமை உணர்ந்து வாழ வேண்டும் .

339.உறங்கு  வதுபோலும் சாக்காடு  உறங்கி

      விழிப்பது   போலும் பிறப்பு .

தூங்குவது போன்றது சாதல். தூங்கி முழிப்பது போன்றது பிறப்பு என்ற நிலையாமையை  உணர வேண்டும்.

340.புக்கில் அமைந்தின்று  கொல்லோ உடம்பினுள்

      துச்சில் இருந்த உயிர்க்கு .

உயிர்க்கு தங்கும் இடம் நிலையில்லாதது.   ஒரு உடம்பில் . ஒதுங்கிடம் உயிர்க்கு இல்லை, என்பதை உணர வேண்டும் .

Share.

Leave A Reply