விருந்தோம்பல்

81.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு .

இல்லறத்தார் தீங்கு வராமல் காத்து இல்வாழ்க்கை வாழ்வது எல்லாம் உறவினர்களை உபசரிப்பதற்கே . பயிர் தொழில் செய்வது வயல் நிலத்தில் தட்டுப்பாடு வராது காப்பதால் மதிப்பு உண்டாகும் .

82.விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

வீட்டின் பின்புறம் உறவினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது குற்றமாகும்.உயிர் வாழும் அமிர்தமே என்றாலும் அது விரும்பும் செயல் அன்று .

83.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்த பாழ்படுதல் இன்று .

வம்சத்தை உபசரித்து தங்கவைத்து பாதுகாத்து வாழும் வாழ்க்கை சூரியஒளி போன்றது.வீணாகப் போவது இல்லை .

84.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

களங்கம் இல்லா மனதுடன் விருந்தினரை பசியாற்றும்போது , உபசரிப்பான் இடம் தேடி நன்மை செய்ய திருமகள் வருவாள் .

85.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிக்ஸில் மிசைவான் புலம் .

சிறந்த தொழில் செய்து விருந்தினரை உபசரித்து ,தெய்வம் விரும்பி வணங்க, கொடுத்தும் அவனிடத்தில் எஞ்சியது உணவு .

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

செல்வியை திருமணம் செய்து உபசரித்து, மகனுக்கு திருமணம் செய்து உபசரித்து காத்திருப்பவனுக்கு புதுமையாக வின்னவரே பிறந்து தேன் உண்பார் .

87.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன் .

விரைந்து உ தவி செய்து வெளிப்படுத்துதல் எல்லாம் விருந்தோம்பல் வாழ்க்கைத் துணையுடன் ,குடும்பத்துணையின் புண்ணியத்தின் பலனில் அமையும்.

88.பரிந்தோம்பிப் பற்றற்றோம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

வருந்தி தவிர்த்து விரும்பாது குற்றம் சொல்வர் ,விருந்து கொடுத்து உபசரிக்கும் புண்ணிய சிறப்பு சிறிதும் செய்யாதவர்.

89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு .

செல்வந்தர் மன விருப்பம் இல்லாமல் விருந்தினரை உபசரிக்க மாட்டார்.அறியாமையால் உண்டு,உறைய விடமாட்டார்.

90.மோப்பக் குலையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குலையும் விருந்து.

முகர்ந்து பார்த்தால் வாடும் அனிச்சமலர்.முகம் சலித்து கண்பார்க்க வருந்துவர் உறவினர்.

Share.

Leave A Reply