42.முள்ளங்கி
முள்ளங்கி இரண்டு வகைகளில் உள்ளது. சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, முள்ளங்கியை குழம்பு , கூட்டு ,பொரியல் என செய்து உணவில் உட்கொள்ளலாம் .
சிறுநீரகக் கோளாறுகளுக்கு முள்ளங்கி சாறு எடுத்து காலை ,மாலை என இரண்டு நேரம் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
சிறுநீரகப் பாதுகாப்பிற்கு தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். அதனுடன் முள்ளங்கி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .
முள்ளங்கியை சாறு எடுத்து சாப்பிட்டா;ல் சளி, தலைவலி, சளியால் வரும் இருமல் நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் காலில் ஏற்படும் வீக்கம் குடையும். முழங்கி சாறு வாழைத்தண்டு சாறு சம அளவில் எடுத்து குடித்து வந்தால் சிறுநீர்கல்லடைப்பு நீங்கும்.
43.கசகசா
கசகசா கடுகு போல் வெண்மையாக இருக்கும்.சிறிதாக இருப்பதால் இது கசகசா என்று அழைக்கப்படுகிறது .
கசகசா வாசனை சுவை கூட்டக் கூடியது. குளிர்ச்சி தரக்கூடியது. சூட்டை ஏற்படுத்தும் உணவுகள் தயாரிக்கும் போது சிறிது கசகசா சேர்த்துக் கொண்டால் சூட்டால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது .
வயிற்றுவலி , வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் கசகசாவை அரைத்துக் குடித்தால் வலி , வயிற்றுப் போக்கு நீங்கும் .
காரட், உருளைக்கிழங்கு, பட்டாணி செய்யும் போது கசகசா சேர்த்துக் கொண்டால் சுவை கூடும். சூடு குறையும்.
44. பூசணிக்காய்
பூசணிக்காய் கொடியில் காய்க்கும் காய், பூசணிக்காய் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த காய். பூசணிப்பூ மார்கழி மாதம் சாணிப் பிள்ளையாரில் வைக்கப்பயன்படுகிறது .மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், நீரழிவு நோய் உள்ளவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
சிறுநீர் போக சிரமப்படுபவர்கள் பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பூசணி விதைகளைக் காய வைத்த பருப்பு அழகு படுத்தப்படும் .
குழம்பு, அவியல், பொரியல், மோர்க்குழம்பு ,அல்வா போன்றை செய்து உணவில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் .
குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக பூசணி அல்வா செய்துகொடுக்கலாம். செய்வதும் எளிது .குழந்தைகள் விரும்பி உண்பார்கள் .
மருத்துவம் தொடரும் .