74- நைவினை நணுகேல்
சங்கரியும், சங்கவியம் சோப்புத் தண்ணீரில் முட்டை விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சங்கவி ஊதும் போது வரும் பெரிய, சிறிய முட்டைகளை கையால் சங்கரி தட்டி விட்டு இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி தரையில் சோப்பு நீர் இருப்பது தெரியாமல் வழுக்கி விட்டு விடும் வெளியில் போய் விளையாடுங்கள் என்றார்கள்.
அப்போது அங்கு வந்த அப்பா சொன்னார். இந்த நீர்க்குமிழி போன்ற சற்று நேரத்தில் அழியக்கூடிய வேலைகளைச் செய்யக் கூடாது என்று
“நைவினை நணுகேல்” என்று கூறி இருக்கிறார் ஔவையார் என்றார்.
பாட்டியும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட…
சரி என்ற சங்கவியம், சங்கரியும் வீட்டின் முன் உள்ள மணல் பகுதிக்கு சென்று விட்டார்கள் விளையாட.