சுபா அண்ணன்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு சந்தோசப்பட்டாள்.
எல்லோருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு சுதாகருக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாள் சுபா.
இப்படியே நாட்கள் ஓடின. சுதாகரும் அங்கே தங்கி விட்டான்.
இந்த காலகட்டத்தில் சுபா,சுதாகரை விரும்ப ஆரம்பித்துவிட்டாள்.
தங்கைக்கு வரன் தேட ஆரம்பித்தார்கள் அண்ணன்கள்.
அண்ணா! என்றாள் சுபா.
என்னம்மா… ஏன் தயக்கம் சொல்லு எனக் கூறினர் அண்ணன்கள்.
அண்ணா! நான் வந்து…. வந்து…
“வந்து…போயி என்று ஏன் இழுக்கிறாய். நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருவோம் சொல்லும்மா” என்றனர்.
நான் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வீர்களா? என பீடிகை போட்டாள் சுபா.
சரி சொல்லு என கூறினார்கள் அண்ணன்கள்.
சத்தியமா!திட்டக்கூடாது, சொன்ன பின் மாறக்கூடாது என்றாள்
சுபா.
“சத்தியம்… சத்தியம்” போதுமா! ஏன்? இன்று இப்படி நடந்து கொள்கிறாய் சுபா என கேட்டார்கள்.
அண்ணா! வந்து நான் இந்த சுதாகரையே திருமணம் செய்து கொள்கிறேன் என நிறுத்தினாள்.
இந்த நொண்டியையா? என ‘இடி’ விழுந்தது போல் உட்கார்ந்து விட்டார்கள் அண்ணன்கள்.
என்ன செய்வது இப்படி கேட்கும் என்று தெரியாமல் சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே என வருத்தப்பட்டார்கள்.
இனி நடப்பது நடக்கட்டும். எல்லாம் இறைவன் விட்ட வழி என மனதை தேற்றிக் கொண்டார்கள்.
நல்ல நாள் குறித்து வேண்டா, வெறுப்பாக தங்கையை திருமணம் செய்து கொடுத்தார்கள் சுதாகருக்கு.
சில மாதங்கள் சென்ற பின் அண்ணன்களும் திருமணம் செய்து கொண்டார்கள். எல்லோரும் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றார்கள்.
சுதாகரும் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குப் போனான்.
காடு முழுவதும் தேடியும் எதுவும் கிடைக்க வில்லை.
ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று வேட்டை கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று தனித்தனியாகச் சென்று விட்டார்கள்.
சுதாகரும் ஒரு பக்கம் சென்று அம்மன் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்ட சுதாகர். இந்த காட்டில் ஒரு பெரிய அரண்மனை வேண்டும் என நினைத்தான்.
ஒரு பெரிய அரண்மனை தோன்றியது.
இங்கு வேட்டையாடிய விலங்கு, பறவைகள் வேண்டும் என நினைத்தான்.
மான், முயல், கொக்கு, புற என அவன் முன்
கிடந்தன.
எப்படியும் மைத்துனர்கள் இங்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான் சுதாகர்.
எங்கு தேடியும் ஒரு புறா கூட கிடைக்காமல் ஏழு பேரும் நின்றனர்.
தூரத்தில் காட்டில் அரண்மனை இருப்பது கண்டு ஆச்சரியப்பட்ட ஏழு பேரும் “வாங்க போய் பார்க்கலாம்” என அண்ணன், தம்பிகள் அனைவரும் அரண்மனையை நோக்கி சென்றார்கள்.
அங்கு ஒரு அரசன் இருப்பதும். அவரைச் சுற்றி பல மிருகங்கள் வேட்டையாடி இருப்பதும் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு மன்னரை வழங்கினார்கள்.
“வேண்டாம்… வேண்டாம் எனக்கு மரியாதை உங்களுக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டான் சுதாகர்.
மன்னா நாங்கள் பல ஆண்டுகளாக வேட்டைக்கு வருகிறோம். ஒருநாள் கூட சும்மா திரும்பியது இல்லை. இன்று எதுவும் கிடைக்கவில்லை.
இந்த அரண்மனையை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை எப்படி? என ஆச்சரியப்பட்டு வந்தோம் என்றனர்.
“இங்கு வந்த பார்த்த பின்பு தான் தெரிகிறது எங்களுக்கு ஏன்?வேட்டை கிடைக்கவில்லை” என்று நிறுத்தினார்கள்.
“வருத்தப்பட வேண்டாம் இதில் ஒரு நொண்டி கொக்கை மட்டும் போட்டுவிட்டு எல்லாவற்றையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என மன்னன் கூறினர்.
அதற்கு முன் உங்கள் பெயர். மனைவி குழந்தைகள் பெயர். ஊர் எல்லாம் இந்த டைரியை எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார் மன்னர்.
ஆகட்டும் மன்னா! அப்படியே செய்கிறோம் என டைரியில் பெயர், ஊர் எல்லாம் எழுதி கொடுத்தார்கள்.
பின்னர் அரசனை வணங்கி விட்டு வேட்டையாடிய விலங்குகளை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினர்.
அவர்கள் மறையும் வரை காத்திருந்த மன்னர்.
குங்குமத்தை அழித்து விட்டு முன்பு போல் நொண்டியாக வேண்டும் என வேண்டினான். மறு நிமிடமே, அரண்மனை மறைந்தது. நொண்டியாக சுதாகர் நின்றிருந்தான். அவன் முன் நொண்டி கொக்கு கிடந்தது.
அதை கையில் எடுத்துக் கொண்ட சுதாகர் நொண்டி…நொண்டி ஊர் வந்து சேர்ந்தான்.
சுபாவின் அண்ணன்கள் எல்லோரும் முயல், மான்,புற எனக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அவர்கள் மனைவியும் மகிழ்ச்சியுடன் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
தன் கணவர் இன்னும் வரவில்லையே என வாசலில் நின்று கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் சுபா.
சுதாகர் கொக்குடன் வருவதைப் பார்த்த சுபா ஓடிப் போய் “உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே” இவ்வளவு நேரம் ஆனவுடன் நான் மிகவும் பயந்து போனேன். இனி நீங்கள் வேட்டைக்குப் போக வேண்டாம், என அழுதுவிட்டாள் சுபா.
என்ன குழந்தை போல் அழுகிறாய் எனக்கு ஒன்றும் இல்லை.என சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான் சுதாகர்.
இந்தா சுபா என்னால் முடிந்தது என்று கொக்கை கையில் கொடுத்தான் சுதாகர்.
“இந்த கொக்கே நமக்கு போதுமே. நீங்கள் வேட்டைக்குப் போகக் கூடாது” என்று கனிவுடன் கூறினாள் சுபா.
தான் ஒரு நொண்டி என்றாலும் தனது மேல் அவள் வைத்திருக்கும் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனான் சுதாகர்.
தன் மனைவியை இன்னும் சோதிக்க விரும்பாத சுதாகர், தான் கொண்டு வந்த டைரியை மனைவியிடம் கொடுத்தான்.
“டைரியை பார்த்த சுபா, என்ன என் அண்ணன்கள் பெயர். விலாசம் எல்லாம் இருக்கிறதே!” எனக் கேட்டாள்.
தன் கையில் உள்ள குங்குமத்தை மனைவியிடம் கொடுத்து சிறுவயதில் தாயிடம் இருந்து பிரிந்து வந்தது முதல் இன்று நடந்தது வரை எல்லாம் சொல்லி முடித்தான் சுதாகர்.
சிறிது குங்குமத்தை எடுத்து தான் மன்னராக வேண்டும் என நினைத்து நெற்றியில் வைத்தான் சுதாகர்.
சுப என்னைப் பார்! என கூறினான் சுதாகர்.
அடுத்த வினாடியே சுதாகர் அழகான மன்னராக அவன் முன் நின்றான்.
தன் கணவனுக்கு கால் நொண்டி இல்லை என அறிந்து மிகவும் சந்தோசப்பட்ட சுபா.
அண்ணா… அண்ணா… அண்ணி இங்கே வாருங்கள் என மகிழ்ச்சியுடன் கூறினாள்.
என்னவோ… ஏதோ… தெரியவில்லை நம்முடன் வந்தவனை நாம் திருப்பி வேறு கூட்டி வரவில்லையே என உணர்ந்த அண்ணன்கள் பதறிய படி வந்தார்கள்.
அங்கு தாங்கள் காட்டில் பார்த்த மன்னர் நிற்பது கண்டு வணங்கினார்கள்.
அண்ணா….இவர் தான் அண்ணா அவர்!
என சுபா சந்தோசத்தில் வார்த்தை வராமல் திணறினாள்.
அவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொன்னாள் சுபா.
உண்மை அறிந்து அவளது அண்ணன்கள் சந்தோசம் அடைந்தனர்.
“ஒரு நொண்டிக்கு தங்கையை கொடுத்தோமே என வருந்தி கொண்டே இருந்தோம்.”என கண்களில் கண்ணீர் பொங்க சொன்னார்கள்.
இனி தாமதிக்க முடியாது. நான் என் பெற்றோரைப் பார்க்க வேண்டும். எங்களுக்கு விடை கொடுங்கள். நாங்கள் இப்போதே ஊர் செல்கிறோம்! என்றான் சுதாகர்.
அவர்களும் வழி அனுப்பி வைத்தார்கள்.
ஊர் வந்து சேர்ந்த சுதாகரும், சுபாவும் வீட்டிற்குச் சென்றார்கள்.
அம்மா… அப்பா.. என சுதாகர் வீட்டிற்குள் விரைந்தான்.
அவன் குரல் கேட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தன்மகன் சொன்னது போல் வந்து விட்டேன் என இருவரும் வயதையும் மறந்து ஓடி வந்தார்கள்.
தன் மகனுடன் வந்த மருமகளையும் பார்த்து கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.
தன் மகன் திரும்பி வரமாட்டான் என்று சொன்ன ஊர் மக்களிடம் காண்பித்து தன்மகன் எப்படியும் வருவான் என்று உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்தோம்.
இனி செத்தாலும் மோட்சம் எனச் சொல்லிச்….சொல்லி சந்தோசப்பட்டார்கள்.
அவர்கள் மட்டுமா? அந்த ஊரே அன்று சந்தோசம் அடைந்தது.
நல்ல கதைகளைக் கேட்டு நீங்களும் நல்லவர்களாக மாறிவிட்டீர்கள். என்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம்!என்ற தாத்தா தனது வீட்டிற்கு செல்ல எழுந்தார்.
சிறுவர்களும் தாத்தா சொன்ன கதைகளைக் கேட்டு சிரித்து, மகிழ்ந்ததுடன். சிந்திக்கவும் செய்தார்கள்.
அடுத்த கதையில் சந்திப்போம்.