கேசவா ”இம்மனிதப் பிறவியிலேயே ”என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா தேவர்கள், மனிதப் பிறவியில் உல்லாசமும், புலன் நுகர்ச்சியும் அதிகமாக இருக்கும்.விலங்கினப் பிறவிகள் அறிவீனம் மிக்கதாக இருக்கும். எனவே , காம குரோதங்களை வசப்படுத்துவது முடியாத காரியமாக இருக்கும்.

மனிதப் பிறவி வாய்ப்பது அரிது. இந்த உடல் அழிவதற்குள் காம, குரோதங்களின் வேகத்தை மன அமைதியோடு பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெறவேண்டும்.

அஜாக்கிரதையினாலும் , அலட்சியத்தினாலும் இந்த அரிய மனித வாழ்வைச் சிற்றின்பங்களில் கழித்து விட்டால் பிறகு மிகவும் வருத்தப்படவேண்டும்.

மனிதப் பிறவியில் பகவானை அறிந்து விட்டால் நல்லது அறியாமல் போனால் மிகப்பெரிய நஷ்டமாகும்.
உடல் அழியக்கூடியது .எப்போது மரணம் நேரும் என்பது தெரியாது.மரண நேரம் நெருங்கும் முன்னரே காம, குரோதங்களை ஜெயித்து விடவேண்டும்.

தடுமாற வைக்காதவாறு தடுத்து நிறுத்தும் ஆற்றலைப் பெற வேண்டும். கடலில் வந்து கலக்கும் ஆறுகள் அனைத்தும் வேகத்துடன் மறைந்து விடுவது போல…
காம, குரோதங்கள் வந்து புகுந்தாலும் வேகம் அழிந்து மறைந்து விடவேண்டும்.அதற்குரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணன் .
கேசவா/ காம, குரோதத்தினால் ஏற்படும் வேகம் அதைப் பொறுத்துக் கொள்ளும் திறமை என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா/ ஆண் , பெண், மக்கள் செல்வம், வீடு , சொர்க்கம் இவற்றால் மனதிற்கும், புலன்களுக்கும் உரிய போகங்களில் சுவை பிறப்பதால் அவற்றை அடைய வேண்டும் என்று எழுகின்ற ஆவலுக்கு காமம் என்று பெயர் .
அதன் காரணமாக உள்ளத்தில் ஏற்படும் பலவிதமான எழுச்சிகள்தான் வேகம்.

மனம் , புத்தி, புலன்களுக்கு இடையூறாகத் தோன்றும் பொருட்கள் வந்து சேரும் போதும் விரும்பியது கிடைப்பதில் இடையூறு .நேரும் போதும் அவற்றிற்கு காரணமானவற்றில் ஏற்படும் வெறுப்பு அதனால் மனதில் ஏற்படும் கொந்தளிப்பு இவையே குரோதம் எனப்படும் .

குரோதத்தினால் மனதில் ஏற்படும் பலவித எழுச்சிகளே குரோதத்தின் வேகம் எனப்படும்.

இந்த மன எழுச்சிகளை அமைதியாக அவற்றினால் உந்தப்பட்டுச் செயலில் இறங்காமல் தடுப்பதற்குரிய சக்தியைப் பெறுவதுதான்.இவற்றைப் பொறுத்துக் கொள்வதின் திறமை ஆகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
கேசவா ‘சுகம் பெற்றவன்’ என்று கூறுவதின் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா/ உலகியலில் எல்லோரும் சுகத்தை நாடுகிறார்கள். உண்மையில் சுகம் எது ., எப்படி கிடைக்கும் . இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் .
பிரமையை உலகியலில் எல்லோரும் சுகத்தை நாடுகிறார்கள் .உண்மையில் சுகம் எது எப்படி கிடைக்கும் . இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் .

பிரமையை சுகமாக எண்ணுகிறார்கள் .தடை ஏற்பட்டால் குரோதம் கொண்டு சுகப்படுவதில்லை. பிறருக்கு தீங்கு விளைவிப்பதற்காக முயன்று பலவித பாவச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் .

முடிவில் , இவ்வுலகில் நோய், துயரம், அவமானம், கெட்டபெயர், கலக்கம் அச்சம், அமைதியின்மை, கொந்தளிப்பு ஆகிய பலவிதத் தொல்லைகளையும் , பரலோகத்தில் நரகத்தையும், மறுபிறவியில் விலங்கு பறவை, புழு, பூச்சி, இப்படிப் பிறந்து பற்பல துயரங்களையும் அடைகிறார்கள்.

போகங்கள் துன்பத்திற்குக் காரணம் என்றும், நொடியில் அழிபவை என்றும் அறிந்து, காம, குரோதங்களாகிய பகைவர்களை முற்றிலும் வென்று அவற்றின் பிடியில் இருந்து முழுமையாக விடுபடுபவர்கள் எப்போதும் சுகமாகவே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சுகம் பெற்றவர்கள் ஆவார்கள் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
மேலும் கூறுகிறார், அர்ஜுனா/ எவன் உறுதியுடன் தீர்மானம் செய்து கொண்டு ஆத்மாவிலேயே சுகம் கண்டு ஆத்மாவிடமே இன்புற்று ஆத்மாவிலேயே உள்ளொளி பெற்று…

சத், சித் ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிவிட்ட சாங்கிய யோகி அமைதி நிறைந்த பிரம்மத்தை அடைகிறான் என்றவர்….

எவர்களுடைய எல்லாப் பாவங்களும் அழிந்து ஐயங்கள் ஞானத்தினால் தெளிவாக்கப்பட்டுவிட்ட நிலையில் அனைத்து உயிரினங்களின் நலனிலும் ஈடுபாடு கொண்ட மனம் சஞ்சலமின்றிப் பரமாத்மாவிடமே நிலைத்து உள்ளதோ அந்த பிரம்மத்தை அறிந்தவர்கள் ஆனந்தமயமான நிர்குண , நிராகார, பரபிரம்ம, பரமாத்மாவை அடைகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன் .
மேலும் அஞ்ஞானம் , பரமாத்மாவைப் பற்றி உண்மை அறிவு உண்டாகி விட்டால் சந்தேகங்கள் அனைத்தும் அவற்றிற்குக் காரணமான அஞ்ஞானத்தோடு அழிந்துவிடும் .

பரமாத்மாவை அடைந்து விட்ட நிர்மலமான மனதுடையவனின் உள்ளத்தில் தடுமாற்றம், திரை முதலிய மாசுகள் இருக்காது.

ஞானியான மேலான மனிதன் எல்லோரிடமும் சமபாவனையுடன் ஆத்மபுத்தி கொண்டு எல்லோருடைய சுகத்திற்காகவும் இயல்பாகவும் பாடுபடுவான் என்கிறார் கிருஷ்ணன் .

கேசவா / ரிஷிகள் என்றால் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று ஏன் பொருள் கொள்ளவேண்டும் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .

‘ருஷ்’ என்ற வேர்ச்சொல்லுக்கு ஞானம் அல்லது பொருளை உள்ளபடி அறிவது என்று பொருள் .


இந்த முறையில் பரமாத்மா தத்துவத்தை உள்ளபடி அறிந்தவர்கள் ரிஷிகள் ஆவார்கள். பாவம் அழிந்தவர்கள், சந்தேகமற்றவர்கள் , வசப்பட்ட மனமுடையவர்கள் என்று அடைமொழிகளும் இதைத்தான் நிருபிக்கின்றன என்கிறார் கிருஷ்ணன் .


காம, குரோதங்கள் விலகிய மனதை வசப்படுத்தி வெற்றி கொண்ட பரபிரம்ம பரமாத்மாவை நேரிடையாக அனுபவித்த ஞானிகளுடைய நாற்புறங்களிலும் அமைதியின் இருப்பிடமாகிய பரபிரம்ம பரமாத்மாவே நிறைந்து இருக்கிறார் .


கேசவ/’காம, குரோதங்கள் விலகிய’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

ஞானி மகாத்மாக்களின் உள்ளம் எப்பொழுதும் பரிசுத்தமாகவே இருக்கும்.அதனால் அவர்களிடம் சிறிது கூட காம, குரோத விகாரங்கள் இருக்க மாட்டாது.
இப்படிப்பட்ட மகாத்மாக்களின் மனதாலோ, புலன்களாலோ என்ன செயல் நடந்தாலும் அது இயல்பாகவே பிறருடைய நலனுக்காகவே நடைபெறும்.


நடைமுறையில் எப்பொழுதாவது அவர்கள் உள்ளத்தில் சாஸ்திரங்களுக்கு ஒத்தவாறு ஏதாவது காமமோ, கோபமோ வெளிப்பட்டால் …
அது ஒரு நாடகத்தில் பாத்திரங்கள் நடிப்பில் ஏற்றுக் கொள்ளும் காம, குரோத, அபிநயம் போல உலக நன்மையின் பொருட்டு அவர்கள் செய்யும் லீலையே ஆகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .


மேலும் கூறுகிறார்,”அர்ஜுனா/ காம குரோதங்கள் அற்றவர்கள் மலதோசம் நீங்கியவர்கள், மன அடக்கம் உடையவர்கள் என்போர் விகபதோசம் நீங்கியவர்கள் ஆத்மாவை உள்ளவாறு அறிந்தவர்கள் என்போர் ஆவரண தோசம் நீங்கியவர்கள் .


இம்மூன்றும் நீங்கிவிட்டால் பரமாத்மாவைப் பற்றிய பூரண ஞானம் ஏற்பட்டு விடும் அப்படிப்பட்ட ஞானிகளிடம் இம்மூன்றும் அறவே நெருங்காது என்கிறார் கிருஷ்ணன் .


கேசவா/ ஞானிகளைச் சுற்றி எல்லாப் புறங்களிலும் சாந்த பரபிரம்ம பரமாத்மாவே நிறைந்து இருக்கிறார் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா பரமாத்மாவை அடைந்து விட்ட ஞாநியான மகாபுருசனின் அனுபவத்தில் மேலும், கீழும், உள்ளும், புறமும், இங்கும், அங்கும், எங்கும் நித்தியமான நிரந்தரமான ஆனந்தமயமான பரபிரம்ம பரமாத்மாவே இருப்பார். இதைத் தான் எல்லாப்புறங்களிலும் பிரம்மம் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது என்கிறார் கிருஷ்ணன் .


மேலும் வெளி விசய போகங்களைச் சிந்தியாமல் அவற்றை வெளியிலேயே தள்ளிக் கண்களின் பார்வையை இருபுருவங்களின் நடுவிலும் நாசியின் உள்ளே சஞ்சரிக்கின்ற பிராண, அபான வாயுக்களை சமமாக்கி புலன்கள் , மனம், புத்தி இவற்றை அடக்கி …
ஆசை, பயம் , கோபம் இவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டு மோட்சத்தில் குறியுள்ள பரமாத்மாவையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற முனிவனான அவன் எப்பொழுதும் விடுதலைப் பெற்றவன் ஆவான் என்கிறார் கிருஷ்ணன் .


கேசவா/ வெளி விசயங்களை வெளியே தள்ளுவது என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .


அர்ஜுனா/ வெளியே உள்ள போக விசயங்களில் மனித உயிர்களுக்கு பல ஆண்டுகாலமாக தொடர்பு இருந்து வருகிறது .

அவற்றின் பதிவுகள் மனதில் சித்திரங்களாக எண்ணற்றவை பதிவாகி உள்ளது. சுகமும், கவர்ச்சியும் உள்ளன என்பதால் மனிதன் போகப் பொருட்களை நினைத்துக் கொண்டு இருக்கிறான் .


முன்வினை மனப்பதிவுகளான சம்சார பற்றுதலும் ஆசைத்தீயை வளர்த்து விடுகிறது .ஆகவே , சிறிது நேரம் கூட அவன் மனம் அமைதியாகவே இருப்பதில்லை.
தியானத்தில் தனிமையில் உட்கார்ந்தால் கூட அவனுடைய மனப்பதிவுகள் அவன் மனதை விட்டு அகல்வது இல்லை. அதனால், பகவானை தியானம் செய்யமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும் .


எனவே, இவற்றை எல்லாம் துக்கத்துக்கு காரணமானவை என்று உணர்ந்து மனப்பதிவுகளை அறவே அழித்து விடவேண்டும். அப்போது மனம் நிலைப்பட்டு அமைதி பெரும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .


கேசாவா/ கண் பார்வையைப் புருவத்தின் மத்தியில் நிறுத்துவது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ கண்கள் நாற்புறமும் பார்த்தால் தியானத்தில் இடையூறு ஏற்படும். கண்களை மூடிக் கொண்டால் சோம்பலும் தூக்கமும் வரலாம்.


யோக சாஸ்திர முறையின்படி ஒரு காரணம் உண்டு. புருவ மத்தியில் இரண்டு இலைகள் கொண்ட ஆக்ஞா சக்கரம் இருக்கிறது .இதன் அருகில் ஏழு உறைகள் உள்ளன .


அவற்றில் கடைசிக் கோசத்தின் பெயர் ‘உந்மநீ ‘ அதை எட்டி விட்டால் ஜீவன் மறுபிறவி எடுக்கமாட்டாது இதைத்தான் புருவ மத்தியில் நிறுத்துவதாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் . தொடரும்

Share.

Leave A Reply