கடுக்காய்
கடுக்காய், செங்கடுக்காய், வரிகடுக்காய், பால் கடுக்காய் என உள்ளன. ஐந்து சுவைகள் கடுக்காயில் அடங்கியுள்ளன (உப்பு தவிர்த்து ).
வாதம் , பித்தம், கபம் போக்குவதால் மனிதனின் அமிழ்தம், காயகல்பம் என்றும் சொல்லலாம். முப்பிணிகளை நீக்குவதில் முதன்மை பெறுவது கடுக்காயாகும்.
மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படுபவர்கள் கடுக்காயை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் .மூக்கில் இரத்தக்கசிவு வரும்போது சிறிது பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினால் ரத்தக்கசிவு நின்றுவிடும் .இவ்விதமாகச் செய்து வந்தால் நாளடைவில் ரத்தம் வருவது நின்றுவிடும் .
கடுக்காய் பொடி, காசுகட்டிப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து பசு வெண்ணெயில் குலைத்து உதடு, நாக்கு புண்களுக்கு காலை மாலை இரண்டு முறை போட்டு வந்தால் புண் ஆறிவிடும் .
பல்வலி, உள்ளவர்கள் சுக்கு, காசுக்கட்டி,கடுக்காய்தோல் சம அளவு எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்தினால் பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக்கசிவு நீங்கும் , வலி குறையும்.
உடலில் புண் ஏற்பட்டு விட்டால் கடுக்காயை நீர் விட்டு உரசி புண் மீது தடவ புண் காயம் குணமாகும் .
தொழுநோயிற்கு இயற்கை வைத்தியமாகிய சித்த மருந்து உண்டு , கடுக்காய், வேர், பட்டை, இலை, பூ இவற்றை உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இரண்டு நேரமும் அரை தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் குடித்து வர தொழுநோய் குணமாகும்.
கடுக்காய்த்தோல் பவுடரை இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி சாப்பிடவேண்டும்.தீராத மலச்சிக்கல் நோயும் இதில் மறைந்து போகும் .

மூலிகை
மருந்துகள் எல்லாம் எங்கே போய் தேடுவது என்று எண்ணவேண்டாம் மூலிகை கடை தமிழ் மருத்துவ கடைகளில் எல்லாவித மூலிகை மருந்துகளும் கிடைக்கும். அவர்களிடம் நமக்கு என்ன தேவை என்பதை சொல்லி வாங்கிப் பயன் அடையலாம். நம் தமிழ் மருத்துவம் வளர்வது வேறு யாரோ கைகளில் இல்லை. நமது கைகளிலே உள்ளது. நாம் நினைத்தால் நம்மை உயர்த்தலாம். நம் மருத்துவத்தை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தால் நம்மை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு உயர்வு வரும்