மும்மூர்த்தி பாடல்கள் மார்கழி மாதம் முதல் நாள்
பிரம்மா
தாமரை மலரிலே அமர்ந்த நான்முகனே
தளராத மனதுடன் நுணுக்கமாய் படைப்பவனே
வாமம் படைப்பை அழகாக படைக்க
விஷ்ணுவின் உந்தி கொடி உறவே
காமாரி வளர்த்து தொழில் செய்ய
கைவேலை ஐந்து படைத்த பிரம்மாவே பாமாலை சூட்டுகிறேன் படைத்த பிரம்மாவிற்கு
பக்தி கொண்டு பாடுகிறேன் அருள்வாய்.
விஷ்ணு
மாதவனே! கேசவனே! மனதார வணங்குகிறேன்
மார்கழி மாதத்தில்
மெய்மறந்து
வணங்குகிறேன்
மாதவாப் பயனாலே பரமனை வணங்குகிறேன்
பாற்கடலில் பள்ளி கொண்டவனை வணங்குகிறேன்
சாதகம் செய்து பாடியே வணங்குகிறேன்
சாந்தி பெறவே சதா வணங்குகிறேன்
சாதனமாய்பயன்படுத்தும் கேசவனை வணங்குகிறேன்
சதா நினைத்து பெருமானே வணங்குகிறேன்.
சிவன்
கைலாய நாதனே காளையில் அமர்பவனை
காலையில் நீராடி சேவடி பணிகிறோம்
நைத்தல் சாம்பல் பூசும் சங்கரா
நெற்றியிலே திருநீர் பூசி வருகிறோம் மைவிழியாள் சிவகாமி பக்கத்தில் தானிருக்க
மூடுபனி நேரத்தில் பக்தியுடன் வருகிறோம் பைமை தவப்பயனே பார்வதி வருகையாள்
பூலோகத் திருமணம் பார்க்கும் பேர்பெற்றோம்.