மார்கழி மாதம் நான்காம் நாள்
பிரம்மா
வான்கண் வருகைக்கு முன் எழுந்து
வானவர் வணங்கும் பிரம்ம முகூர்த்தத்தில் கொன் பொழுதில் காலை கடன்முடித்து
குளிர்ந்த நீரில்நீராடி தலை வாரி
நான்கு வேத நான்முகனை நினைத்து
நாண்மலர் பறித்து தொடுத்து சூட்டுகிறோம் மான்மகனே வேதப் பொருளைச் சொல்கிறோம்
மக்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய்
விஷ்ணு
ஆதிசேஷன் மேல் நர்த்தனமாடும் கண்ணா
அயர்ந்து தூங்கும் பள்ளியறையும் அதுதானே
ஊதியம் கருதி உயர்ந்து உலகளந்தவனே
உனக்குள் உலகை அடக்கிக் கொண்டாயே ஓதிய மரம் ராமஜெயம் ஆனது
ஒதுங்குகிறோம் உன் தாழ் பணிந்து
கதியென சரண் புகுந்த பின்பு
காக்க வல்லவர் நீதானே கண்ணா!
சிவன்
புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனே
புகழுக்கு ஆசை கொண்டவரை விரட்டியவனே
சிட்டுக் குருவிபோல்
துருதுருவென இயங்கி
சிக்கித் தவித்த மக்களைக் காத்தவனே கட்டு விறகு சுமந்து களைத்து
கவி பாடி தமிழிசை காத்தவனே
தட்டுத் தடுமாறும் மக்கள் குறைபோக்கும்
சொக்க நாதனே
உன்தாழ் பணிகிறோம்