மார்கழி மாதம் மூன்றாம் நாள்
பிரம்மா
கறை கடமை செய்யும் சிற்பி
பக்தியுடன் சிற்றுளி கொண்டு செதுக்க இறைவனே குருவே திருவடி வணங்கி
இதயத்தை ஒரு நிலைப் படுத்தி கவனம் சிறைப்பட்டு சிலையை வடிக்கும் சிற்பியாய்
சிதராத எண்ணம் கொண்டு தியானித்து மறைமொழி ஓதி மனதில் வேண்டுகிறோம்
வேத நாயகனே பிரம்மாவே அருள்வாய்
விஷ்ணு
அசுரரை அழிப்பதற்கே கண்ணனாய் பிறந்தவனே
அஞ்சாத சிறுபிள்ளை ஆயன் மாயன் பசுக்கூட்டம் மத்தியிலே தலைவனாய் இருப்பவனே
பச்சைப் பால்பிரியன் புல்லாங்குழல் இசைப்பிரியன்
சிசுவாக இருந்தாலும் சிறந்த பிள்ளை
சிரமம் இல்லாமல் வெண்ணையுண்ணும் பிள்ளை
வீசும் காற்றில்
கடல்அலை தாலாட்ட
வீற்றிருக்கும் எம்பெருமானே காப்பவனை வணங்குகிறோம்
சிவன்
சடைமுடி தரித்த சங்கரன் இருந்தாலும்
சக்தியுடன் இணைந்த அண்ணாமலை ஈசனே படை சூழயிருக்கும் பூதத் தலைவனே
பவனே பெண்மைக்கு சரிபாதி உடல்தந்தவனே கடைந்த போதுவந்த நஞ்சை உண்டவனே
கடுகளவும் மக்களுக்கு தீங்கு வராமல்
தடை செய்த ஈசனே சர்வேசனே
அடியவரை காப்பவனே உன்தாழ் பணிகிறோம்