சின்னஞ் சிறுமியாய் இருக்கும் போது
சிறுவன் தோழன் நீ உன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்தேனா
எண்ணிப் பார்க்கிறேன் இல்லை?
இன்முகம் கொண்டு சிரிக்கும் சிரிப்பில்
தோழமைக் கொண்டு விட்டேன்
இன்னடி வந்தால் உன்னிடம் சொல்ல
ஆறுதல் சொன்னவன் நீ!

காலையில் கண் விழித்துப் பார்க்கையில்
கண் எதிரில் உன்முகம் மாலையில் வணங்கி தூங்கும் போது
பார்க்க சுவரில் உன்முகம் சாலையில் போகும் போது கோயிலைக்
கண்டால் மனதில் உன்முகம்
சோலையில் மலர் பூக்களைக் கண்டால்
சூடிப் பார்க்கும் என்மனம்.

தேடித் தேடிப் போனேன் முருகா
தோழன் உன்னைக் காண ஓடி ஓடி பார்த்தேன் முருகா
காவடி பால் குடம்
ஆடி ஆடி வந்த பக்தர்
பக்தியை என்ன என்பேன் நாடி நாடி நல்லது செய்யும்
நல்லவன் தாழ் பணிந்தேன்.

பருவ வயதை அடைந்த போதும்
பக்கத் துணை நீதானே கரு சுமந்த பெண்ணான போதும்
காத்து நின்றவன் நீதானே குருத்து போல கருத்தை தந்து
குடி காத்தவன் நீதானே மருத்துவ மனை செல்லாமல் வீட்டில்
வைத்தியம் பார்த்தவன் நீதானே!

குருவாய் வந்து உபதேசம் செய்த
குல ஆசான் நீதானே கருத்தாய் எடுத்து எழுதச் சொன்ன
குல தெய்வம் நீதானே தருவே திருவே என்ன என்பேன்
என் உயிர் நீதானே வருவாய் முருகா வரமே தருவாய்
எப்போதும் தோழன்
நீதானே!


ஆண் தோழன் வேண்டாம் என்று
அப்பா சொல்ல வில்லை ஆண் தோழன் வேண்டாம் என்று
அம்மா சொல்ல வில்லை ஆண் தோழன் வேண்டாம் என்று
கணவரும் சொல்ல வில்லை
ஆண் குழந்தை பிறந்த போது
முருகா உன் பெயர் வைத்தேன்.

Share.

Leave A Reply