என்ன வேண்டும் முருகா!
எனக்கு என்ன வேண்டும்? கன்னச் சிரிப்பில் கண்ட
போது என்ன வேண்டும்? சின்னகையில் வேல்பிடித்து
சிங்கார நடை நடந்து தின்மை அழிக்க வரும்
போது என்ன வேண்டும்?
வண்ண மயில் ஏறிவந்து
வடிவழகை காட்டி நின்று திண்ணமாக நிற்கும் போது
எனக்கு என்ன வேண்டும்? உண்ணும் உணவு தந்து
உடுத்த உடையும் தந்து எண்ணும் நினைவில் எல்லாம்
நல்ல எண்ணம் தந்து
கொள்கை பிடிப்பு தந்து
கொண்டவர் துணையும் தந்து
துள்ளும் மழலை தந்து
துடிப்பான பேச்சு தந்து கள்ளம் இல்லா மனம்தந்து
கல்வி அறிவு தந்து
உள்ளம் நிறையவைத்தபின்
எனக்கு என்ன வேண்டும்?
பக்தி நிறைந்த மருமகள்
பக்கத்தில் மகளாய் இருக்க சக்தி தந்து எனக்கு
சமூகப் பணிகள் செய்ய முக்தி கிடைக்கும் வரை
மூச்சினில் உன்பெயர் சொல்ல
பக்தி கொண்ட பின்
எனக்கு என்ன வேண்டும்?
குலக் கொடி தந்து
குதூகல வாழ்வு தந்து
வலம் வந்து வணங்க
வடிவேலன் அருள் தந்து பலம் பெற்று வாழ
பொன் பொருளும் தந்து உலம் மகிழ கொடுக்கும்
போது என்ன வேண்டும்?
கோவிலைச் சுற்றி வந்தேன்
மனக்கோயிலில் இருந்து விட்டாய்
பாவி என்று யாரும்
சொல்லாமல் வாழ்ந்து விட்டேன்
காவி உடைஅணியவில்லை
கந்தனை மறந்தது இல்லை
ஆவி போகும் போதும்
உன்னையே என்ன வேண்டும்.