76- நோய் கிடங்கொடேல்
கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கியதும். பள்ளிக்கூடம் வந்த சில மாணவர்களுக்கு சளிப் பிடித்து காய்ச்சல், இருமல் என வந்துவிட்டது.
இருமும் போது காற்றில் பரவி பக்கத்து மாணவன் என பலருக்கும் காய்ச்சல்.
வீட்டிற்குச் சென்று குணம் ஆவதற்குள் அம்மா, தம்பி, அப்பா என அடுத்தடுத்து சளி, காய்ச்சல், இருமல் பரவி போவதற்குள் இரண்டு வாரங்கள் ஆகி… அதன் சோர்வு போகி நல்லபடியாக செயல்பட மூன்று வாரமே ஆகிவிடும்.
இப்படி நோய் வராமல் தடுக்க தொட்டிச் செடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் தண்ணீரைச் சுத்தப் படுத்த வேண்டும். அதில் உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து ஊற்றினால் கொசு வராமல் இருக்கும். டெங்கு போன்ற நோய் வராமல் தடுக்கலாம் என மருத்துவ சிகிச்சைக்கு வந்தவரிடம் சமூக ஆர்வலர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நோய் கிடங்கொடேல்” என்று புலவர் ஔவையார் கூட சொல்லி இருக்கிறார் என்று அங்கு அமர்ந்திருந்த பெரியவர் கூறினார்.