349-கல்வி கற்பக விருட்சம் போன்றது காலத்தை கடந்தும் நிற்பது.350- இயற்கை அழகு எல்லோருக்கும் உண்டு இயல்பாய் பேணுதல் சிறப்பு. 351-நேரம் வாழ்வின் உயிர் நாடி உணர்ந்து உழைத்தால் உயர்வு. 352-நேர்மை சுவாச உறுப்பாய் இருந்தால் ஆயில் நீண்டு வாழலாம்.353- தன்னை நேசிக்க கற்றுக் கொண்டால் பிறரை நேசிப்பது எளிது.354- வெற்றி தோல்வி நாணய இருபக்கம் நேரே நின்றால் தடுமாறும்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
13-தட்டு தடுமாற்றம் இருக்காது முருகா! தன்னம்பிக்கை கொடுக்கும் முருகா!கட்டு மனம் தரும் முருகா! கதியென பணிந்தவர் கண்டு !மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு முருகா! மகிமை செய்ய வருவாய் !கிட்டவர் நெருங்கார் முருகா உன்! அருள் பெற்ற பின்னே!
343-மனிதனிடம் குறையை கூறின் ஏளனம் இறைவனிடம் கூறின் கருணை.344- முடியும் என்பது தாரக மந்திரம் ஆனால் முடியாத செயல் இல்லை.345- சமாதியை நினைத்து துன்பம் கொள்ளாமல் சாதனையை நினைத்து வெல்வோம்.346- தோல்வி வரும் போது தள்ளிப்போடு நேரம் வரும்போது செயல்படு. 347-வாழ்க்கை என்பது வசந்த காலம் அனுபவிப்பதே சொர்க்க வாசல்.348- பந்தயம் என்ற பகடக் காயில் சூதை விலக்கி வெல்வீர்.
சுற்றி சுற்றி சுழலும் உலகம் சுற்றிக் கொண்டே வரும்! சுற்றி சுற்றி உன்னை வந்தால் உலகப் பிறவிஅகலும்! பற்றி பற்றி பாதம் பணிந்தால் மலரடி சேர முடியும்! ஒற்றி ஒற்றி அடைந்த போது ஒருமையுடன் ஏற்றுக் கொள்வாய்!
337-உயரப் பறக்கும் பறவையாய் இருப்போம் உயர்ந்த சிகரத்தை பிடிப்போம். 338-பலன் கருதா உதவி பின்னாளில் பாலம் போன்ற நட்பாய்.339- அசுர லாபம் ஆபத்தில் முடியும் அசையாது சாதிக்கும் கொக்கு .340-வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம் கைகுலுக்கி வெற்றி தோல்வி. 341-உழைக்கத் தயங்கும் ஒவ்வொரு நொடியும் பின்னோக்கிய பயணத்தில் நாம்.342- தன்னை நம்பி தளராது உழைத்தால் தரணி போற்றும் ஒருநாள்.
11-நிம்மதி கிடைக்க வழி வகுத்தாய் நெஞ்சம் நிறைந்தது முருகா! அம்பிகை பார்வதி மகனே முருகா ஆனந்த வடிவேல் முருகா! இம்மை பிறவி பயன் அடைய வழி வகுத்த முருகா! பம்பல் பெற்றேன் முருகா உன் ஞான அருளால் முருகா!
331-நம்பிக்கையில் உள்ளது உழைக்கும் சக்தி நம்பிக்கைக்கு அதுவே வித்து. 332-மாய நீர் பளபளப்பாய் கண்ணுக்கு முன்னால் போனால் வெறுமை.333- சுயகட்டுப் பாட்டுக்கு விரதம் அவசியம் சுலபமாய் மனமதில் கட்டும்.334- கோபத்தை வென்றவன் தன்னை வெல்வான் கொடியது கோபத்தில் சாபம்.335- துன்பமென நினைப்பது துன்பம் இல்லை துணிவுக்கு அதுவே வித்து.336- பால் ஒன்று மாற்றம் பல பகுத்தறிய பாதிப்பும் வெற்றியில்.
10-பித்தாய் பிதற்றி பிதற்றி சிந்தையில் உன்னை நினைத்து புலம்பி !அத்தன் அருள் பெற்றேன் முருகா ஆனந்தம் பெற்றேன் முருகா! சித்தன் வாழ்ந்த குடியில் இருந்து சித்தர் புடை சூழ! நித்திரை வரும் வரை எழுத அருள் தந்த முருகா!
325- தண்ணீரில் மிதக்கும் மிதவையாய் இருப்போம் ஆசையில் மூழ்குதல் அழிவு. 325-ஏர்வழி செல்லும் காளை பெற்றோர் வழி பிள்ளை.326- பரபரப்பான பயணம் பாசமும் தொலைந்து பரந்த உள்ளமும் தொலைந்து. 327-அமைதியைத் தேடி அலையும் மனம் அலை கடல் போல் அசைந்து. 328-புற்றீசல் போல் பொருள் சேர்க்க புழுவாய் துடிக்கும் நிம்மதி. 329-அக்கரை சேர்ப்பது தோணி வாழ்வை புத்தகம் செப்பனிடம் ஏணி .
9-அன்னையின் அருள் பார்வை பட்டதால் ஆனந்தம் கண்டேன் முருகா! என்னை அவளிடம் கொடுத்த பின் எல்லை விரிந்து போனது! தன்னை மறந்த நிலையில் முருகா தரணிக்கு சொன்னதை செய்தேன்! என்னை திருப்பி அழைத்த போது உன்னையே நினைத்து நின்றேன்!