எதை எதிர்பார்த்தும் யாரும் வாழ்வதில்லை
யாரிடம் போய் கேட்டாலும் எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய ஆசை இல்லை
அவரவர் தகுதிக்கேற்ப
சிறிது சிறிதாய் ஆசைகள் வைத்திருக்கிறார்கள்
தவழ்ந்து செல்பவன் நடக்க வேண்டும் என
நடந்து செல்பவன் விரைந்து போக
விரைந்து செல்பவன் மிதந்து போக
மிதந்து செல்பவன் பறந்து போக
என அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆசைகள்.
மற்றபடி யாரும் எதுவும்
எதிர் பார்ப்பது இல்லை இவர்கள் கனவு காண கூட தகுதி வைத்திருக்கிறார்கள்
மீறிக் கண்டால் உன் தகுதிக்கு இது தேவையா! எனக் குட்டிக் கொள்வார்கள்
முதல் படிகளில் இருந்து இரண்டாம்
படிக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இவர்கள் கனவு.
இரண்டாம் படிக்குச் சென்ற பிறகு தான்
மூன்றாம் படியைப் பற்றி சிந்திப்பார்கள்
உச்சியை அடைய வேண்டும் என்ற
பேராசையெல்லாம் இவர்களுக்கு கிடையாது.
அடுத்த வீட்டுக்காரனை ஆச்சரியப்பட
வைப்பது தான் இவர்கள் லட்சியம்
இவர்கள் வாழ்க்கை சுழற்சி அட்டவணை இல்லாமல் அழகாய் வட்டமிடும்.
பொதுவாய் பார்த்தால் சம்பந்தமே
இல்லாமல் தோன்றும் செயலுக்கும் கூட
அவரவரிடம் போய் கேட்டால் தான் தெரியும்
அதற்கும் ஒரு பெரும் கதை இவர்களுக்கு பேராசை எல்லாம்
எதுவும் கிடையாது
இவர்கள் அதிகபட்சம் நாடு அளவில் சிந்திப்பதே விளையாட்டுப் போட்டி நடக்கும் சமயங்களில் தான்.