தெளிவாய் பார்
விளக்கமாய் கேள்
மெதுவாய் யோசி
சரியாய் முடிவெடு
உறுதியாய் வெளியிடு

செய்வதை யோசி
செய்யும் போது நேசி செய்ததும் மறந்திடு

உன்னைச் சுற்றி வட்டம் இடு அதில் யாரும் நுழையாதிருக்க அதன் விட்டத்தை
மறைத்துவை அப்போது தான் நீ எப்போதும் நீயாக இருப்பாய்

உன்னை நீயே பயிற்சி செய் உன்னை நீயே பிழை திருத்து உன்னை நீயே செதுக்கு உன்னை நீயே வண்ணம் தீட்டு

உன்னை நீயே படித்து முடி உன்னை நீயே கோடிட்டு நிரப்பு உன்னை நீயே பரீட்சை செய் உன்னை நீயே உருமாற்று உன்னை நீயே உலகத்திற்கு அறிமுகம் செய்
உன்னை நீயே உயர்த்திக் கொள்.

Share.

Leave A Reply