வெற்றி அடைய வேண்டும் அதை எப்படி அடைவது
என்று யாருக்குத்தான் தெரியும்

ஒருவனிடம் போய் கேட்டேன் இப்படி செல்ல வேண்டும் என்றான் ஒருவன்.

அப்படி மட்டும் செல்லாதே என்றான் இன்னொருவன்.

எப்படியாவது சொல் என்றான் மற்றொருவன்.

இப்படித்தான் செல்ல வேண்டும் என்றான் இன்னொருவன்.

எப்படித்தான் செல்வது…!

வெற்றியை அடைய என்ன தகுதியோடு செல்ல வேண்டும் இயற்கை நீதி ஒன்றை மட்டும் தெளிவாய் சொன்னது.

ஒரே ஒரு தகுதி மட்டும்
போதும் என்று
அது என்ன தகுதி
உலகில் வெற்றி பெற்ற அனைவரும் ஒரு பக்கம் தோல்வி அடைந்த
அனைவரும் ஒரு பக்கம்

தராசில் வைத்து நிறுத்துப் பார்ப்போம்
பணக்காரனும் தோற்றிருக்கிறான்
ஏழையும் வென்றிருக்கிறான்
பணம் தடை இல்லை.

படித்தவனும் தோற்று இருக்கிறான்
பாமரனும் வென்றிருக்கிறான்
படிப்பு தடை இல்லை.

வீரனும் தோற்று இருக்கிறான் கோழையும் வென்றிருக்கிறான்
பலம் தடையில்லை.

புத்திசாலையும் தோற்று இருக்கிறான்
முட்டாளும் வென்று இருக்கிறான்
அறிவு தடை இல்லை.

ஆற்றல் படைத்தவனும் தோற்று இருக்கிறான்
ஊனம் உடையோனும்
வென்று இருக்கிறான்
ஊனம் தடை இல்லை.

எல்லாம் இருந்து தோற்றவர்களும்
இங்கு இருக்கிறார்கள் எதுவுமே இல்லாமல் வென்றவர்களும்
இங்கு இருக்கிறார்கள்.

எதுவுமே இல்லாமல் வென்றவர்களும் இங்கே இருக்கிறார்கள்
ஒன்று மட்டும் தான் இவர்களை பிரித்துக் காட்டுகிறது அது மட்டும் தான் வெற்றியை பெற்றுத் தருகிறது.

அது நம்பிக்கை தோற்றுப் போன எவனிடமும் இல்லாத ஒன்று நம்பிக்கை.

வெற்றியடைந்த அனைவரிடமும் இருந்த ஒன்றே ஒன்று நம்பிக்கை.

அந்த நம்பிக்கை மட்டும் இருந்தால்
அது எல்லாவற்றையும் பெற்றுத் தரும்.

வெற்றியை அது மட்டுமே பெற்றுத் தரும்
நீயும் வெற்றி அடைவாய் நம்பிக்கையோடு இரு.

Share.

Leave A Reply