ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ பூ பிரம்மகமலம். இந்த செடி வைத்து ஐந்து ஆண்டுகள் கழித்தே பூக்க தொடங்கும்.இலையின் நரம்பில் இருந்தே மொட்டு விட்டு பூவாக மலர் கிறது. இரவு 10 மணிக்கு மேல் விரியத் தொடங்கி பிரம்ம முகூர்த்தமான அதிகாலை நேரம் வரை மலர்ந்து இருந்து பின்னர் இதழ்களை மூடி மொட்டுப்போல் காட்சி தருகிறது. ஆண்டுக்கு ஒரு முறையே மலரும் பூ. நறு மனம் வீசும் வெண்கமலம் அதுவே பிரம்ம கமலம். கேரளாவில் இதை நிசா காந்தி என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
எங்கள் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வளர்த்து வந்த பிரம்ம கமலம் விஜய தசமி அன்று ஐந்து மலர்கள் மலர்ந்துநறுமணம் வீச இரண்டு மலர்கள் துளசியை பார்த்து வணங்குவது போல் மலர்ந்து இருக்க மற்ற மூன்று மலர்களும் முருகன்,பிரம்மா,சரஸ்வதிக்கு சூட்டி அழகுபார்த்த காட்சி உங்கள் கண்களுக்கும் விருந்தாக.