‘ஆ’என்றால் -பசு.பசு கொடுக்கும் பால் குழந்தை முதல் பெரியவர் வரை குடித்துஉடல் நலம் காக்கப்படுகிறது. பாலில் இருந்து வரும் தயிர், மோர்,வெண்ணெய்,நெய் போன்ற அனைத்தும் நமக்கு ஆகாரப் பொருளாக பயன்படுகிறது.
பாலில் இருந்து பால்கோவா, பால் கேக், இனிப்பு வகைகள் ,பாயாசம் இப்படி பல வகையிலும் உணவு பண்டங்களையும் சாப்பிடுகிறோம்.
தயிர் பச்சடி,அவியல், லெஸ்சி இப்படி பயன்படுத்தி சாப்பிடுகிறோம்.தயிரைக் கடைந்து மோர், வெண்ணெய் எடுக்கிறோம்.மோர்க் குழம்பு ,வற்றல் போட, நீர் மோர் குடிக்க இப்படி பல வகைகளிலும் பயன்படுத்திக் கொள்கிறோம்.வெண்ணெய் வாய்ப்புண்,வயிற்றுப்புண் போக பயன்படுகிறது.கேக்,பழகேக் ரொட்டியில் வைத்து சாப்பிட சப்பாத்தி மாவில் சேர்த்து அல்லது சப்பாத்தி சுடும்போது வெண்ணெய் சேர்த்து செய்து சாப்பிடும்போது சூட்டைக் குறைக்கப் பயன்படுகிறது.
வெண்ணெய் கிருஷ்ணனுக்குப் பிடித்த உணவு, அஞ்சநேயருக்கும் பிடித்த உணவு.வெண்ணெய்க் காப்பு அவர்களுக்கு படைத்து மகிழும் போது மனம் அமைதி கிடைக்கும் நோய் பறந்து போகும்.நெய்விளக்கு ஏற்றுவதால் அதில் இருந்து வரும் வாசம் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும் .எனவேதான் இல்லத்திலும்,கோவிலிலும் நெய்விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுகிறோம்.விளக்குத் தீபம் எரிவது போல் நம் வாழ்விலும் ஒளி ஏற்படுகிறது.
குழந்தைளுக்கு உணவு கொடுக்கும் போது பருப்பு,நெய் சேர்த்து கொடுப்பதால் உடல் வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.நெய் சேர்த்து பல இனிப்புகள் செய்து சாப்பிட்டு மகிழ்கிறோம் .எனவே , பால் ஆகாரம் ஆகிறது.பால் திரிந்து ‘ஆக்கப்’பொருளாகி நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
காலை,மாலை நேரங்களில் ஆதவனைப் பார்க்கும் போது ஆணிப்பூ (கண் நோய்)ஆணிபுரை (கண் புரை) வராமல் தடுக்கப்படுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படும்போது எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து கண்வலி தாக்காமல் தடுக்கப்படுகிறது.
ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனுக்காக விரதம் இருந்து சூரிய தரிசனம் பார்ப்பது கண்பார்வை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். காலையில் சூரிய வழிபாடு செய்வதும் கண்பார்வைக்காகத்தான் . மஞ்சள் காமாலை ,தோல் நோய் வராமல் தடுக்கப்படும்.

ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவதால்விளக்கு நின்று நிதானமாக எரியும்.அதுபோல் நமது வாழ்விலும் நிதான ம், அமைதி கிடைத்து புகழ் வரும்.
மலச்சிக்கல் போக்கக் கூடிய மருந்து.வெப்பக் காலத்தில் மலச்சிக்கல் உள்ளவர்கள் சிறிது உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் வராது.குளிர் காலத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.ஆமணக்கு எண்ணெய் குளிர்ச்சியானது .குளிர்ச்சி உள்ள உடல் என்றால் சன்னி கூட வந்து விடும் .எனவே குளிர் காலத்தில் பயன்படுத்த வேண்டாம்.
ஒரு சொட்டு அல்லது இரண்டு சொட்டு அளவுதான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதிகமாக சேர்க்கக் கூடாது.வயிற்றுப் போக்கு ஏற்படும்.."அளவு தெரிந்து பயன்படுத்துவது நலம் பயக்கும்’
"சுளு"க்கு ஏற்பட்டவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் சிறிது தேய்த்துவிட்டு சுளுக்கு எடுக்க வேண்டும்.அப்போது தான் நரம்புகள் இளகுவாகி அந்த அந்த நரம்புகளுடன் சேர்ந்து ‘சுளு’க்கு போகும்.அழுத்தி தேய்க்கவேண்டும்.
சீதபேதி,குளிர் காய்ச்சல் இப்படி இருக்கும் போது ஆமணக்கு எண்ணெய் சேர்க்கக் கூடாது.
ஆலமரம்
ஆலமரம் தான் வளர்ந்து விழுதுகள் விட்டு அதுவும் பூமியில் புதைந்து வளர்ந்து விடும்.ஆண்டுகள் பல ஓடினாலும் ,ஆலமரம் பல தலைமுறை கண்டுவிடும்.ஆலமர விழுது முடி வளரப் பயன்படுத்தப்படுகிறது.இலையை பச்சையாக பறித்து பச்சயம் போக வைத்து அதில் ஓவியம் தீட்டி மகிழலாம்.ஆலமர கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடலாம்.
ஆலம் பழம் பறவைகளுக்கு நல்ல உணவாகவும்,மரம் வீடாகவும் பயன்படுகிறது.ஆலமர நிழல் பலரையும் அமர வைத்து காற்று வாங்கச் செய்கிறது.கிராம சபை கூடுவது ஆலமர அடியில் தான்.இப்படி ஆலமரம் மனிதர்களையும், பறவைகளையும் மகிழ வைக்கும் இயற்கை சாதனம்.நல்ல காற்றைத் தந்து சுவாசத்திற்குப் பயன்படுகிறது.
ஆரம்
நந்தவனத்தில் பூக்கும்மலர்களைத் தொடுத்து ஆரமாக கட்டி இறைவனுக்குச் சாற்றி மகிழ்ச்சி அடையலாம்.சந்தன மரத்தில் செய்த மாலையையும் சாற்றி மகிழலாம்.சந்தனத்தில் பல பொருள்கள் செய்யலாம்.நெற்றியில் சந்தானம் அணிந்தால் சாந்தம் கிடைக்கும்
மருத்துவம் தொடரும்…