குடும்பமாக வாழ வேண்டும் என வாழ்வியல் தத்துவத்தை விளக்கி கற்பிப்பதே திருக்கோவிலாகும்.


மனிதன் வாழ முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுவதே இந்து கடவுள்களின் நோக்கமும் கூட…

இந்துக் கோவில்களுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு .சிவன்,பார்வதி,கணேசன்,முருகன் என குடும்பமாக கோவிலில் குடிகொண்டு அருள்வதாகும்.


அருளும்,அறிவும்,அன்பும்  நிறைந்த இடம்கோவில்.இந்த மூன்றையும் மனிதன் வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும் என உணர்த்துவதே,"கோவில்"  நமக்கு கற்றுத்தரும் தத்துவம் ஆகும்.

அருளும் குணமும் அன்பான நேயமும் ,அறிவான வாழ்வும் வாழ்ந்தால் இறையருள்  உண்டாகி வீடு பேறு அடைய வழிவகுக்கும்,என்பதைநமக்குச் சொல்லிக் கொடுப்பது ஆலயமாகும்.
மனிதன் தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தாய்-தந்தையாக விளங்குகிறான்.
இறைவன்  எல்லோருக்கும் வெறுப்பு விருப்பு இன்றி தாய், தந்தையாக விளங்குகிறான்.தாழ்ந்தவன்,உயர்ந்தவன் என்ற  பாகுபாடு எல்லாம் இறைவனுக்கு இல்லை.
எந்த மனிதன் உடல் வருத்தி உள்ளம் வருத்தி தன்னை சரணாகதி அடைகிறானோ …. அவனுக்கு வரம் கொடுத்து அருளும் குணம் ஒன்றே அவனுடையது.உண்மையான பக்திக்கு மட்டுமே அடிபணிபவன் இறைவன். பத்தி மார்க்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழத்தான் செய்யும்.ஒருமுகப்படுத்துவது தான் சிறந்த வழியாகும்.
இதை எடுத்துக்காட்டத்தான் கோவில்களில் ஐந்துமுக (பஞ்சமுக) தீபார்த்தனை காட்டப்படுகிறது. இறுதியில் ஒரு தீபார்த்தனை காட்டி நிறைவு செய்வார்கள்.


மனித உடலின் உறுப்புகள் ஆகிய ஐந்து புலன்களையும் அடக்கி ஒருமுகப் படுத்தி பார்க்கும் போது நான் இருக்கிறேன் என இறைவன் அருள்வான்,என்பதே இதன் விளக்கமாகும்.

எண்ணங்களால் உயர்ந்தவன் இறைவன்.கோவிலின் கோபுரம் உயர்ந்து நிற்பதும் அதனால் தான்.பிடித்தவன் பிடிக்காதவன் என்ற வேறுபாடு எல்லாம் இறைவனுக்கு கிடையாது.நாம் என்ன நினைக்கிறோமோ அவ்வாறே அருள்பவன் இறைவன்.
சிவன் அடியவரான பூசலார் நினைத்ததை நடத்திக் காட்டிய வரலாற்றைப் பார்ப்போம். தொண்டை நாட்டிலே திருநின்றவூரிலே பூசலார் நாயனார் பிறந்தார்.வேதங்களை கற்றுத் தேர்ந்தவர். சிவன் மேல் பக்தி மிகுந்தவர்.சிவன் விரும்புவதை எப்படியாவது முயன்று செய்பவர்.பூசலார் திருக்கோவில் ஒன்று கட்ட விரும்பினார்.அதற்கு பொருள் தேட முயன்றார்.பொருள் சிறிதும் கிடைக்கவில்லை.
தளர்ந்து போன பூசலார் மனதினால் கோவில் கட்ட உறுதி கொண்டார்.கோவில் அமைப்புகளை எல்லாம் மனதில் வடிவம் கொடுத்தார்.சுற்றுச் சுவர் ,கோபுரம் என அமைத்தவர்,கிணறு,குளம் இவைகளையும் எடுத்தார். பின் எல்லாப் பணிகளையும் மனதினால் எண்ணி கோவில் கட்டி முடித்து விட்டார்.


பிரதிஷ்டை நாளை பஞ்சாங்கம் பார்த்து நிச்சயம் செய்து கொண்டார் பூசலார்.

அச்சமயத்தில் காடவ மன்னர் காஞ்சியிலே ஒரு  திருக்கோவில் கட்டி முடித்தார்.பிரதிஷ்டைக்கென ஒரு நன்னாள் குறிக்கப்பட்டது. அந்நாளுக்கு முன்னாள் சிவபிரான் மன்னர் கனவிலே தோன்றினார்.’காடவ மன்னா ,திருநின்றவூரிலே ‘பூசல்’ என்பவன் ஒருவன் இருக்கிறான்.


அவன் நீண்ட  நாள் நினைத்து..நினைத்து ஒரு கோவில் கட்டியுள்ளான்.நாளை நாம் அதில் எழுந்தருள்வோம்.ஆதலால் உனது ஆலயப் பிரதிஷ்டயைப் பின்னொரு நாளில் வைத்துக்கொள்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உடனே ,மன்னர் விழித்தெழுந்தார்.பூசலாரைக் காண விரும்பினார்.உடனே,திருநின்றவூரை அடைந்தார்.அங்கிருந்தவர்களைப் பார்த்து "பூசலார் கட்டிய திருக்கோவில் எங்கே இருக்கிறது" என்று விசாரித்தார்.
"பூசலார் இங்கு ஒரு கோவிலையும் கட்டவில்லை "என்ற பதிலே வந்தது.என்ன செய்வது என்று யோசித்த மன்னர் அவ்வூர் அந்தணரை அழைத்து வரும்படி கூறினார். அந்தணரும் அழைத்து வரப்பட்டார்.அவரிடம் ‘பூசலார் எங்கிருக்கிறார்.’எனக் கேட்டார். ‘பூசலார்  இவ்வூரவர்தான்.அவரை அழைத்து வருகிறேன் "என புறப்பட்டார் அந்தணர்.
மன்னர் அவரைத் தடுத்து அவர் துணைகொண்டு தாமே பூசலாரிடம் சென்றார். பூசலாரைக் கண்டு தொழுதார்.
பின்பு, N’அடிகளே தாங்கள் கட்டிய திருக்கோவில் எங்கே இருக்கிறது ?அத்திருக்கோவிலுக்கு இன்று பிரதிஷ்டை நாள் என்பதைச் சிவபிரான் கூறி அறியப்பெற்றேன்" எனவே அடிகளை வணங்க வந்தேன் என்றார் மன்னர்.


மன்னர் கூறியதைக் கேட்டதும் பூசலார் மருண்டார்.இச்சிறியோனை ஒரு பொருட்டாக கருதியா சிவபெருமான் அருள் புரிந்தார் என எண்ணினார்.

‘மன்னா நான் திருக்கோவில் கட்ட முயன்றேன்.பொருட்களே கிடைக்கவில்லை.அதனால் ,நான் மனதில் கோவில் கட்டினேன்.’என்று கட்டிய முறையையும் விளக்கி கூறினார் பூசலார்.


மன்னர் மனம் மகிழ்ந்து மெய்சிலிர்த்து நாயனாரைத் தொழுது வணங்கி விடை பெற்றுச் சென்றார்.

பூசலார் தமது மனக்கோவிவிலில் சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்தார். சிவகால வழிபாட்டிற்குப் பின் சிவபிரான் திருவடி நிழலைச் சேர்ந்தார்.
"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்ப இல"   என்கிறார் வள்ளுவர்.
அவரவர் செய்யும் பாவ புண்ணிய பலனாகவே இன்ப துன்பத்தை அடைகிறான்.அதற்கு இறைவன் காரணமல்ல என்பதை புரிந்து இறையடி தொழவேண்டும்.
Share.

Leave A Reply