இன்றைய பழமொழி
“உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன்.
உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?”
பொருள் :-
உள்ளூரில் ஒரு சிறிய செயல் செய்யத் தெரியாதவன் முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?
சரியான பொருள் :-
உடையார்பாளையம் என்பது ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தானம் மக்கள் முன் ஒரு வீர செயலை செய்து காட்ட முடியும். என்பது பொருள்