அழகுக் குறிப்பு கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை தேவையான பொருட்கள் :- உலர்ந்த ஆரஞ்சு தோல் 100 கிராம் வெந்தயம் 100 கிராம் பிஞ்சு கடுக்காய். 10 கிராம் பச்சை பயறு கால் கப் எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.
Author: பிரேமா பால கிருஷ்ணன்
பழமொழி ” நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” பொருள் :- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று மனிதர்களுக்காக மாறுபட்ட மறுவப்பட்ட பழமொழி இது. ஒரு விஷயத்தை ஒரு தடவை சொன்னவுடன் அதை அறிந்து புரிந்து அதை கேட்டு அதன்படியே நடப்பவன்தான் நல்ல மனிதன். உண்மையான பொருள் :- நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு, சுவடு என்ற வார்த்தை மருவி சூடு என்றாகி விட்டது. அதாவது இதன் விளக்கம் சந்தையில் மாட்டை வாங்க நினைப்பவர்கள் தடத்தை வைத்து கவனித்து வாங்குவார்கள். அதாவது அது பதிக்கும் தடம் நன்றாக நல்ல அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் மாட்டின் வலிமையும் உடல் நலத்தை கவனிப்பதற்காகவே இப்பழமொழி கூறி உள்ளார்கள்.
“முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்”! பொருள் :- முருங்கை மரத்திலிருந்து பெரிய லாபம் எதுவும் ஈட்ட முடியாது. இதை விவசாயத்திற்கு நட்டு வளர்த்தால் வெறும் கையோடு தான் போகவேண்டும். உண்மையான பொருள் :- முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய் இவைகளை தொடர்ந்து உண்பவர்களுக்கு உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் அதிகம் கிடைப்பதால், எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் கூன் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இது பயன்படுகிறது. இதன் காரணமாக முருங்கை நட்டவன் கைகளில் தடி போன்றவை ஊன்றாமல் வெறுங்கையோடு நடப்பான். என்பது உண்மையான பொருள்.
தேவையானவை :- 1. எலுமிச்சைச் சாறு 2. முட்டை வெள்ளைக்கரு 3. தேன் ஒரு சிறிய கிண்ணத்தில் 4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு முட்டை வெள்ளைக்கரு மற்றும் 4 டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் சருமத்தில் உள்ள தழும்புகள் சீக்கிரம் மறைந்துவிடும்.
இன்றைய பழமொழி ” ஆறிலும் சாவு ; நூறிலும் சாவு ” பொருள் :- 6 வயதிலும் சாவு வரும். 100 வயதிலும் சாவு வரும் என்பது. உண்மையான பொருள் :-மகாபாரதத்தில் கர்ணன் பஞ்ச பாண்டவர்கள் (ஐவர் )பக்கம் இருந்தாலும் கௌரவர்கள் (100 பேர்) பக்கம் நின்றாலும் போரின் பொழுது இழப்பு வரும். ஆதலால் துரியோதனனின் மீதுள்ள நட்பின் காரணமாக கௌரவர்களிடம் இருக்கிறேன் என்று சொன்னது.
பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சினைகளில் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளுக்கு உடனடித் தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா. பேக்கிங் சோடா அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளை வேரோடு வெளியேற்ற இறந்த செல்களையும் நீக்குகிறது. 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து. பின் மென்மையாகத் தேய்த்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு இப்பிரச்சினைகள் அதிகம் இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.
“பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்” பழுத்த ஸ்ட்ராபெர்ரி முகப்பருவால் வரும் வடுக்களை விரைவில் குறைக்க உதவுகிறது. இது தோலில் உள்ள அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம் ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது. வீட்டில் ஸ்ட்ராபெரி பேஸ்ட் செய்யும் முறை :- மூன்று ஸ்ட்ராபெரி எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும். இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடம் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள் முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தைத் தரும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும்…
இன்றைய பழமொழி “உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன். உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?” பொருள் :- உள்ளூரில் ஒரு சிறிய செயல் செய்யத் தெரியாதவன் முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா? சரியான பொருள் :- உடையார்பாளையம் என்பது ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தானம் மக்கள் முன் ஒரு வீர செயலை செய்து காட்ட முடியும். என்பது பொருள்