“பருவால் உண்டான வடு மறைய
ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்”
பழுத்த ஸ்ட்ராபெர்ரி முகப்பருவால் வரும் வடுக்களை விரைவில் குறைக்க உதவுகிறது.
இது தோலில் உள்ள அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம் ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது.

வீட்டில் ஸ்ட்ராபெரி பேஸ்ட் செய்யும் முறை :-
மூன்று ஸ்ட்ராபெரி எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும். இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடம் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள் முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தைத் தரும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வர வேண்டும் ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதைப் பார்க்கலாம்.