முழுமுதல் கடவுள் விநாயகர் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உலகத்து உச்சியில் அமர்ந்து இருப்பார் அவர் தன்னோடு அருகம்புல்லைத் தான் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால். அந்த அருகம் புல்லின் பெருமையை நாம் அறியத்தான் வேண்டும்.

” ஆல்போல் தழைத்து… அருகுபோல் வேரூன்றி”
என்று வாய்மொழி வழக்கைப் போல்…

” பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகை(அருகம்)”
என்று அகநானூறு கூறுவது போலவும்…

” ஆபத்துக்கு உதவும் அருகம்புல்”
எனும் பழமொழி போலவும்

“கண்ணோ யோடு தலைநோய் கண்புகை இரத்த பித்தம்”
என்ற சித்த மருத்துவ பாடல் அருகம்புல்லின் நோய் போக்கும் தன்மை குறித்து தெளிவு படுத்துகிறது.

இந்த அருகம்புல் அருகு, மூதண்டம், தூர்வை, மேகாதி, பதம், அருகு, போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. உணவாக, மருந்தாக, குடிநீர், அருகன் தைலம், என பல வகையில் நமக்கு பயனளிக்கிறது. அருகம்புல் வாதம்-பித்தம்-கபம்(சளி) ஆகிய நோய்களையும் ,அருகம்புல் ஆனது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரத்தப்போக்கு மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், அலர்ஜி, அரிப்பு, ஆகியவற்றை கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கிறது.

அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு அதை சிறிது சிறிதாக கத்தரித்து மிக்ஸியில் இட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து அதை வடிகட்டி இன்னும் சிறிது நீர் கலந்து அப்படியே பருகலாம். அல்லது அதனோடு சிறிது பனங்கற்கண்டு கலந்து பருகலாம்.
அவ்வாறு தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். அதிக ரத்தப்போக்கு உள்ள பெண்களுக்கு இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவும். வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.மேலும் கண் நோய்களுக்கு அருகம்புல் சாறு மிகவும் நல்லது முற்றிய அருகம்புல்லை எடுத்து அதன் கணுக்களை நீக்கி விட்டு நன்கு இடித்து ஒரு துணியில் வைத்து கண்களின் பிழிந்து இரண்டு சொட்டு விடுவதன் மூலம் கண் எரிச்சல், கண் வீக்கம், கண் கட்டிகள், போன்றவை குணமடையும்.

அருகம்புல் சாறுடன் வால் மிளகு 2 சிட்டிகை சேர்த்து குடிநீரில் கலந்து குடித்து வர நன்மை பெயர்க்கும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து காலையில் பருகி வந்தால் உடல் பருமன் குறைந்து நன்மை கிடைக்கும். அருகம்புல்லின் முற்றிய வேர்களை கைப்பிடி அளவு சேகரித்து அதை நன்கு அரைத்து மோரில் கலந்து குடித்து வர சிறுநீர் பாதிப்புகள் குறையும். ஆண்களுக்கு நன்மை தரும்.

புட்டி பாலுடன் சிறிது அளவு அருகம்புல் சாறு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால். தாய்பாலுக்கு சமமான சக்தி கிடைக்கும். அருகம்புல் சாறை “பச்சை இரத்தம்” என்று அழைக்கும் அளவுக்கு அது நமக்கு மிகவும் முக்கியமான மூலிகையாக உள்ளது. எனவே அனைவரும் இதை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Share.

Leave A Reply