லட்டு மஞ்சள் லட்டு
கடலை மாவு   லட்டு
இனிப்  பான   லட்டு
சுவைத்துப் பாரு லட்டு

அழுத குழந்தைக்கு லட்டு
கொடுக்க வேண்டும் லட்டு
சீனி கலந்த  லட்டு
சிரிக்க வைக்கும் லட்டு

சீர் வரிசைக்கு லட்டு
சினேகிதர் வீட்டுக்கு லட்டு
உலகம் போல லட்டு
உருண்டை யான லட்டு

தட்டு நிறைய லட்டு
புட்டு சாப்பிட  லட்டு
திருப்பதி கோயில் லட்டு
விரும்பி சாப்பிடும் லட்டு

Share.

Leave A Reply