காலை கதிரவன் ஒளிபட்டு விடியல் கண்ட
சிட்டுக் குருவி கூண்டை விட்டு வெளியில் வந்து
கீச்….. கீச்….. யென
காணம் பாடி
இங்கம்… அங்கும் பறந்து.. பறந்து பாட!

பூக்கள் மலர்ந்து
மணம்வீச தேன் சிட்டுப்
பறவை தேன் உருஞ்சி
குடித்துப் பாடி சின்ன
சிறகால் சிறகடிக்க!

பூனைக் குருவி
தாவித் தாவி பாடி
வந்து உணவுண்டு தண்ணீர் குடிக்க!

மா…. மா…என்று
கன்று பால் குடிக்க
பசுவிடம் செல்ல!

கி…கி…கி…என்று
அணில் கம்பியில்
சாகசம் செய்ய!

கா…கா…என்று
காகம் இனத்துடன்
பேசி மகிழ…!

கூ…கூ…என்று குயில்

ஜோடிக்  குயிலுடன்
பாடி  வர…!

காலை கதிரவன் வரவு
குயில்கள்  சபாவில்

கச்சேரி அரங்கேற்றம்!

இயற்கை நிகழ்வு
இதயத்தின் மகிழ்வு.

Share.

Leave A Reply