51- 
ஏற்றம் பெற விரும்பின்
சீற்றம் குறைத்து சீராக்கி நாட்டம் கொண்டு உழை.

  52-
ஆண்மைக்கு உடல் வலிமை
பெண்மைக்கு மன வலிமை
நேர்மைக்கு மெய்
வலிமை.

53-
காக்காய் எங்கள் சாதி
குருவி அணில் எங்கள் தோழி.

54-
ஊருக்குப் போகும்போது முகம் பார்க்காமல் வாடும் தொட்டில் செடி.

55-
மூன்று கோடுகள் இந்திய அணில்
கோடு இல்லாமல் அமெரிக்கா அணில் ராமர் பாதம் படாததால்.

56-
நீல வானத்தில் வெள்ளை மேகம் தவழ்ந்தது
சூரிய வரவால்.

57-
குலுங்கி குலுங்கி சிரித்தது
குழந்தை நடந்ததால் கொலுசு மணி.

58-
மேகம் நீர் கொடுக்க அணை தேக்கி வைக்க பசுமை புரட்சி.

59-
ஓடும் தண்ணீர்
உயர்ந்த மரங்கள் கண்ணுக்கு விருந்து. 

60-
மடை திறந்த வெள்ளம் மகிழ வைக்கும் மரங்கள் காட்டு வளம்.

Share.

Leave A Reply