மகனே! “நாம் செய்யும் அறம் மட்டுமே அடுத்த பிறவிக்கும் நம் உடன் கூட வரும். ஒருவன் முற்பிறவில் தர்மம் செய்யாமல் இருந்தால் மறுபிறவியிலும் அதன் பயனை அடைய நேரும்” என்ற அம்மா விளக்கினாள்.

அது எப்படி இந்தப் பிறவியில் செய்வது அடுத்த பிறவிக்கு சேரும். என்பதை எப்படி நம்புவது என்று வாதிட்டான் சங்கர்.

எல்லாம் கடவுளின் சித்தம் அவர் இன்றி அணுவும் ஆசையாது.எல்லாம் அவன் செயல் என்று மீனாட்சி கடவுளை புகழ்ந்தாள்.

“அந்தக் கடவுள் எங்கு இருப்பார் நான் அவரைப் பார்த்து என் சந்தேகத்தை போக்காமல் வரப் போவதில்லை” என்று சங்கர்உறுதி பூண்டான். 

மகனின் உறுதியைக் கண்ட தாய் இதுவும் அவன் செயலே என எண்ணினாள்.

“சங்கர் காட்டுக்குள் சென்று அமைதியான இடத்தில் ஒற்றைக்கால் தவம் செய்தால் சிவன் உன் முன் காட்சியளிப்பார் அப்போது உன் சந்தேகத்தைக் கேள், என்று கூறினாள் மீனாட்சி.

தன் மகனுக்கு புளியோதரை செய்து கொடுத்து வழி அனுப்பினாள்.

சங்கர் ஊரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்து சிறிது தூரம் போயிருப்பான் அவன் செல்லும் வழியில் ஒரு நல்ல பாம்பு படுத்திருந்தது.

அதைக்  கண்ட சங்கர் ஏன் இப்படி வழியில் படுத்திருக்கிறாய்  உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.

அசைய கூடமுடியாமல் ஏன் இப்படி கிடக்கிறாய் என்று கேட்டான். இதைக் கேட்ட பாம்பு மகிழ்ச்சியடைந்து என் நிலை கண்டு  நீயாவது என்ன என்று விசாரித்தாயே தம்பி!

எனக்கு வயதாகிவிட்டது. நவரத்தினம் என் தொண்டையில் பெரிதாக வளர்ந்து இருக்கிறது. இதை கக்க முடியாமல் இப்படி அவதிப்படுகிறேன்.

உணவு உட்கொள்ளவும் முடியவில்லை. என்று துக்கத்துடன் சொன்னது பாம்பு.

இதைக்  கேட்ட சங்கர் பாம்பே கவலைப் படாதே நான் கடவுளைப்  பார்க்கப் போகிறேன்.

உன் குறையை இறைவனிடம் சொல்லி உன் கஷ்டத்தைப் போக்க வழி கேட்கிறேன். என்றான் சங்கர்.

பாம்பும் சரி என்று கூறி வழி விட்டது. காட்டு வழியாக வெகு தூரம் நடந்து விட்டான் சங்கர்.

மகனே! “நாம் செய்யும் அறம் மட்டுமே அடுத்த பிறவிக்கும் நம் உடன் கூட வரும். ஒருவன் முற்பிறவியில் தர்மம் செய்யாமல் இருந்தால் மறுபிறவியிலும் அதன் பயனை அடைய நேரும்” என்று அம்மா விளக்கினாள்.

அது எப்படி இந்தப் பிறவியில் செய்வது அடுத்த பிறவிக்கு சேரும். என்பதை எப்படி நம்புவது என்று வாதிட்டான் சங்கர்.

எல்லாம் கடவுளின் சித்தம் அவர் இன்றி அணுவும் ஆசையாது.எல்லாம் அவன் செயல் என்று மீனாட்சி கடவுளை புகழ்ந்தாள்.

“அந்தக் கடவுள் எங்கு இருப்பார் நான் அவரைப் பார்த்து என் சந்தேகத்தை போக்காமல் வரப் போவதில்லை” என்று சங்கர்உறுதி பூண்டான். 

மகனின் உறுதியைக் கண்ட தாய் இதுவும் அவன் செயலே என எண்ணினாள்.

சங்கர் காட்டுக்குச் சென்று அமைதியான இடத்தில் ஒற்றைக்கால் தவம் செய்தால் சிவன் உன் முன் காட்சி அளிப்பார் அப்போது உன் சந்தேகத்தை கேள் எனக் கூறினாள்.

மீனாட்சி தன் மகனுக்கு புளியோதரை செய்து கொடுத்து வழி அனுப்பினாள்.

. சங்கர் ஊரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்து சிறிது தூரம் போயிருப்பான் அவன் செல்லும் வழியில் ஒரு நல்ல பாம்பு படுத்திருந்தது.

அதைக்  கண்ட சங்கர் ஏன் இப்படி வழியில் படுத்திருக்கிறாய்  உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.
அசைய கூடமுடியாமல் ஏன் இப்படி கிடக்கிறாய் என்று கேட்டான்.

இதைக் கேட்ட பாம்பு மகிழ்ச்சியடைந்து என் நிலை கண்டு  நீயாவது என்ன என்று விசாரித்தாயே தம்பி!

எனக்கு வயதாகிவிட்டது. நவரத்தினம் என் தொண்டையில் பெரிதாக வளர்ந்து இருக்கிறது. இதை கக்க முடியாமல் இப்படி அவதிப்படுகிறேன்.

உணவு உட்கொள்ளவும் முடியவில்லை. என்று துக்கத்துடன் சொன்னது பாம்பு.

இதைக்  கேட்ட சங்கர் பாம்பே கவலைப் படாதே நான் கடவுளைப்  பார்க்கப் போகிறேன்.

உன் குறையை இறைவனிடம் சொல்லி உன் கஷ்டத்தைப் போக்க வழி கேட்கிறேன். என்றான் சங்கர்.

பாம்பும் சரி என்று கூறி வழி விட்டது. காட்டு வழியாக வெகு தூரம் நடந்து விட்டான் சங்கர்.

அவனுக்கு பசித்தது ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என நினைத்து சுற்றும், முற்றும் பார்த்தான்.

இரண்டு மாமரங்கள் பெரியதாக நின்றது. அதன் அடியில் சென்று அமர்ந்து. அவன் கொண்டு வந்து சாப்பாட்டை சாப்பிட்டான்.

சிறிது நேரம் படுத்து விட்டு போகலாம் என எண்ணியவன் படித்துக் கொண்டு மரத்தைப் பார்த்தான்.

அவ்வளவு பெரிய மரத்தில் ஒரு காய்ப்பு கூட இல்லை. அவனுக்கு ஒரே ஆச்சர்யம் இவ்வளவு பெரிய மரத்தில் ஒரு பூ, காய் கூட இல்லையே! என வாய்விட்டு சொன்னான்.

இதைக் கேட்ட மரம். தம்பி! எங்களுக்கும் இதே கவலை தான் .இவ்வளவு பெரிய மரமாக வளர்ந்தும் ஒரு பூக்கூட பூக்கவில்லை.

அது ஏனென்று எங்களுக்கும் தெரியவில்லை. இவ்வளவு பெரியதாக வளர்ந்தும் அடுத்தவர்களுக்கு ஒரு கனி கூட கொடுக்க முடியவில்லை. என கவலையாக இருக்கிறது.

எங்களுக்கு என்ன குறை என்று தெரியவில்லை. என கவலையுடன் மரங்கள் கூறின.

“கவலைப்படாதீர்கள், நான் கடவுளைப் பார்க்க போகிறேன். உங்கள் குறைகளை கடவுளிடம் சொல்லி அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு வருகிறேன்.” என்று ஆறுதல் கூறினான்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு தன் பயணத்தை தொடங்கினான் சங்கர்.

இருட்டும் நேரம் நடக்காட்டிற்கு சென்றுவிட்டான்.

அங்கு மிருகங்களின் கத்தலும், பறவைகளின் கீச்…. கீச் குரலும் மரங்களின் சலசலப்பும் அவனை பயமுறுத்தின.

கடவுளை நினைத்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.
அந்த  சமயம் ஒரு வேடனும் வேடுவச்சியும் அவன் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள்.

சங்கரைப் பார்த்த வேடன், “அடப் பொடியா! ஏன் இந்த காட்டிற்கு தனியாக வந்தாய்! இங்கு புலி, சிங்கம் எல்லாம் இருக்கும். வழிதவறி விட்டாயா!” என வினவினான்.

அவன் மனைவியோ, “யோவ், அவன் எப்படி வந்தால் உனக்கேன். இருட்டி விட்டது வா போகலாம்”. என இரக்கமே இல்லாத குரலில் பேசினாள்.

” ஏ…. புள்ளே! அந்தப் பையனை நம்மோடு இந்த ராத்திரி பொழுது வைத்திருந்து விட்டு காலையில் அனுப்பி வைப்போம் .கொஞ்சம் பெரிய மனசு பண்ணு” என்று அவனும் கெஞ்சாத குறையாக கேட்டான்.

கணவனை ஒருமுறை முறைத்து விட்டு, “அவனை கூட்டி வந்து தொலை” என்று கூறியபடி விடுவிடு என நடந்தாள்.

வேடனும் சங்கரை தன்னுடன் வருமாறு சைகை செய்துவிட்டு, அவளை பின் தொடர்ந்து நடந்தான்.

மரத்திற்கு மேல் உள்ள பரனில் மூன்று பேரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். நன்றாக இருட்டிவிட்டது.

மரத்துக்குக் கீழ் கரடி, புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வேடுவச்சு தேனும், திணை மாவும் எடுத்து இரண்டு பாகமாக பிரித்து ஒன்றை வேடனிடம் கொடுத்துவிட்டு. மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டாள்.

அதைப்  பார்த்த  வேடன் அந்த பையனுக்கு என இழுத்தான்.

“முதலில் இருக்க இடம் கொடுத்தே  இப்ப சாப்பிட வேறா? என் பங்கை நான் தரமாட்டேன். நீ சாப்பிடுவாயோ இல்லை” அவனுக்கு கொடுப்பாயோ எனக்கு கவலை இல்லை எனக் கூறிவிட்டு வெடுக்கென திரும்பி சாப்பிட ஆரம்பித்தாள்.

இவ்வளவு சொன்னதே போதும் என எண்ணிய வேடன். அவனுக்கு கொடுத்த உணவில் இருவரும் உண்டு உறங்கினார்கள்.
                               தொடரும்.

Share.

Leave A Reply