தை பொங்கல்
வண்ணக் கோலம் வெளி வாசலில்
மாவிலை தோரணம் நிலை வாசலில்
தோகை கரும்பு பூஜை அறையில்
மஞ்சள் கொத்து பானை கழுத்தில்
அன்பு என்ற பாலை ஊற்றி
பண்பு என்ற அரிசி இட்டு நேசம் என்ற வெல்லம் இட்டு
பாசம் பொங்க பொங்கல் வைப்போம்.
பாலைத் தரும் பசு கன்றுக்கும்
ஏர் உழும் காளை மாட்டிற்கும்
வாழ உதவும் இயற்கை பூமிக்கும்
நன்றி சொல்லி பொங்கல் வைப்போம்.
கோதைப் பொங்கல் மார்கழியில் பொங்குது! கூடைப் பொங்கல் மார்கழியில் பொங்குது! பால் பொங்கல் தையில் பொங்குது!
குப்பிப் பொங்கல் தையில் பொங்குது.
