காலையில் கதிரவன் ஒளி பட்ட பின்பு தான் எழுந்தார்கள். வேடுவச்சு இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

வேடன் சங்கரை மரத்தில் இருந்து கீழே இறக்கினான். சிறிது தூரம் வரை வழித் துணையாக வந்து “பத்திரமாக போ தம்பி” என வழி அனுப்பி வைத்தான்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நல்ல உள்ளம் என நினைத்தபடி விடைபெற்றான் சங்கர்.

ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஒற்றை காலில் நின்றபடி சிவனை நினைத்து தவம் செய்தான் சங்கர் .

பல ஆண்டுகள் நிறுத்தாமல் தவம் செய்தான் சங்கர். “ஓம் நமச்சிவாய” என்ற ஒலி கயிலாயத்தில் கேட்டது.

சிவனைப் பார்த்த பார்வதி கேட்டாள். “இந்த ஒலி பல ஆண்டுகளாக கேட்கிறது”. நீங்கள் செவிமடுக்காமல் இருக்கிறீர்களே சுவாமி!

சிறுவனாக இருந்தாலும் தான் வந்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் விடாது உங்களை வணங்குகிறான்.

இன்னும் சோதிக்க வேண்டாம். வாருங்கள் அவனுக்கு தரிசனம் கொடுப்போம். என்று பார்வதி கூறினாள்.

சிவனும், “அவ்வாறே ஆகட்டும் என்று கூற இருவரும் பூலோகத்திற்கு வந்தார்கள்”.

” பக்தா! உன் பக்தியை மெச்சினோம் உனக்கு என்ன வேண்டும். என்று சிவன் கேட்டார்.”

கண்விழித்த சங்கம் தன்முன் சிவனும், பார்வதியும் இருப்பது கண்டு ஆனந்த கூத்தாடினான். நான் காண்பது கனவு இல்லையே என அவனை கிள்ளி பார்த்துக்கொண்டான்.

“பத்தா! நீ காண்பதுமெய்யே,  நீ ஏன் உன்னை இவ்வாறு வருத்தி தவம் செய்கிறாய்?” என்று சிவன் கேட்டார்.

” இறைவா!  தர்மம் செய்வதால் யாது பலன். பயன் என்ன என்று அறியவே நான் உங்களை காண  விரும்பினேன் என்றவன். வழியில் பாம்பு, மரம் ,வேடன் இவர்களை கண்டதையும் அவர்களின் குறைகளையும் கூறினான்.

ஐந்தறிவு படைத்த பாம்பு தன் வாயில்  ரத்தினத்தை அடக்கி வைத்திருப்பதே அவன் துன்பத்திற்கு காரணம்.

நல்லவன் ஒருவனுக்கு அதைக் கக்கி கொடுத்து விட்டால் அதன் துன்பம் தீரும்.

“மரத்துக்கு கீழே இரண்டு அண்டாவில் புதையல் இருக்கிறது. அதை ஒரு நல்லவரிடம் ஒப்படைத்தால் மறுநிமிடமே மரம் பூத்து, காய்க்கும்.”

“ஆறு அறிவு உள்ள வேடன் வேடுச்சி இருவருக்கும் உள்ள குணம் உனக்கு நன்கு தெரியும்
இருவரும் இப்போது இறந்துவிட்டார்கள்.

அவர்கள் முட்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தால் வேடன் இளவரசனாகப் பிறந்திருக்கிறான். வேடு வச்சு பன்றியாக பிறந்திருக்கிறாள்.

நீ மன்னன் அரண் மனைக்குச் சென்று தங்க தாம்பலத்தில் பிறந்த குழந்தையை எடுத்து வரும்படி கூறு.

குழந்தை உன் பெயர் சொல்லி வேடன் குரலில் பேசும் .நேரில் போய் பார். அறம் சிறந்தது என்று நீ எண்ணினால் .

உன் தாயாருடன் சேர்ந்து தர்மம் செய்து வாழ். என வாழ்த்தி சிவனும், பார்வதியும் மறைந்தார்கள்.

அவர்கள் சொன்னபடி அரண்மனைக்குச் சென்றான் சங்கர். அரசனை பார்த்து வணங்கி! தான் வந்த காரியத்தை கூறினான் சங்கர்.

மன்னரும் மனம் மகிழ்ந்து வரவேற்று தன் மகனை தங்கத்  தாம்பளத்தில் வைத்து எடுத்து வருமாறு கட்டளை இட்டார்.

பணிப் பெண்ணும் அவ்வாறே குழந்தையை எடுத்து வந்து சங்கர் முன் காட்டினாள்.

“சங்கரைப்  பார்த்த குழந்தை சிரித்தது. பின் சங்கர்  நீ போன காரியம் முடிந்ததா?” எனக் கேட்ட குழந்தையைப் பார்த்து எல்லோரும் வியந்தனர்.

பின் அக்குழந்தை பேசவில்லை. சங்கரும் மன்னரைப் பார்த்து அக்குழந்தை ஆண்டவன் அருள் பெற்ற குழந்தை நீங்கள் புண்ணியவான் என்று அவர் காலில் விழப்போனான்.

இறைவனையே  பார்த்து வந்த நீங்களே! புண்ணியவான். என்று மன்னரும், அவர் மனைவியும் சங்கர் காலில் விழுந்தார்கள்.

மன்னரிடமும், மகாராணி இடமும் விடை பெற்றுக் கொண்டு தன் ஊருக்கு செல்வதாக சொன்னான் சங்கர்.

மன்னரும் பல்லாக்கு ஒன்று ஏற்பாடு செய்து அதில் பயணம் செய்யுமாறு கூறி பொன்னும், பொருளும் கொடுத்து வழி அனுப்பினார்.

வரும் வழியில் மாமர த்திடம் இறைவன் கூறியதை சொன்னவுடன் உன்னை விட நல்ல மனிதரை நான் எங்கு தேடப் போகிறேன்.

நீயே இரண்டு அண்டாவில் உள்ள புதையலையும் எடுத்துக் கொள். என்று சங்கருக்கு புதையல்களை கொடுத்தது.

அடுத்த நிமிடமே மரம் பூவும், பிஞ்சுமாக காட்சியளித்தது. மரத்திடம் விடை பெற்று…

நல்ல பாம்பிடம் வந்தான். பாம்பிடம் இறைவன் கூறியதை சொன்னவுடன் உன்னை விட நல்லவனை எங்கே தேடப்  போகிறேன்.

நீயே! எடுத்துக்கொள் என்று நவரத்தினத்தை கக்கி கொடுத்து விட்டு நிம்மதியாக மூச்சு விட்டது பாம்பு.

பாம்பிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் ஊருக்கு வந்து சேர்ந்தான் சங்கர். அவனைக் கண்ட மீனாட்சி ஆனந்த கண்ணீர் வடித்தாள்.

தன் மகன் இவ்வளவு பெரியவனாக வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி பொங்க கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

சங்கர் தன் தாயிடம் நடந்தவைகளை எல்லாம் எடுத்துக் கூறினான்.

தான் கொண்டு வந்துள்ள பொன், பொருள், புதையல் எல்லாவற்றையும் தர்மம் செய்வதிலேயே செலவு செய்ய வேண்டும் என்று அம்மாவிடம் கூறினான்.

தாயும் உள்ளம் மகிழ்ந்தாள் தாயுடன் சேர்ந்து தர்ம காரியங்களில் ஈடுபட்டான் சங்கர்.

கேட்டீர்களா! குழந்தைகளே அறம் செய்வது எவ்வளவு புண்ணியம் என்று அப்பளக் குடுமி தாத்தா கூறியவுடன். 

தாத்தா நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வோம் என்றார்கள்.

இன்று வெகு நேரம் ஆகிவிட்டது குழந்தைகளே! நாளை சந்திப்போம். என்றவர் துண்டை தோளில் போட்டுக் கொண்டு கம்பீரமாக கிளம்பினார் தாத்தா.

Share.

Leave A Reply